சான்றோர் வாய் (மை) மொழி :
179-அறிவியல்
சிந்தனைகள்:
நால் வகைக் கோட்பாடுகள்:
3.இன்பநிலைக் கோட்பாடு – எபிகூரஸ்- EPICURAS.கி.மு.
342…..தொடர்ச்சி……….
இயற்கையின் விதிகளுக்கேற்ப உலகம் இயங்குகிறது. இஅற்கையின் சட்ட, திட்டங்களை மாற்றவோ….
மீறவோ முடியாது. கடவுள் உண்டு என்று கொண்டாலும்
கடவுளுக்கும் உலகியல் வாழ்க்கைக்கும் எள்ளவும் தொடர்பில்லை. மனித
வாழ்வில் கடவுள் குறுக்கீடு உண்மையில்லை.
இன்ப நுகர்வே வாழ்வின் குறிக்கோள் அரிய மனித வாழ்வின்
முதலும் முடிவுமாக இருப்பது இன்ப நுகர்வே. உணர்வுகளோடு ஒன்றியூறும்
இன்பத்தைத் தவிர வேறு எதனையும் நன்று என்று தீர்மானிக்கவோ, அடைவதற்கோ முயற்சி செய்யவோ முடியவில்லை.
– என்றார் எபிகூரசு.
இயல்பான ஆசையை நிறைவு செய்து மனத்தை சமநிலைப்படுத்தும் இன்ப உணர்வை
நாடவேண்டும்.
மனிதனை அச்சுறுத்தி, கோழையாக்கி வைத்திருந்த சமயத்தை வேரொடுபிடிங்கி
மனிதனின் காலடிப் பட்டுக் கசக்கி அழியச் செய்வதில் வெற்றி கண்டவர் எபிகூரசு’ என்கிறார் இவர் மாணவர் லுக்ரிடஸ்.
……………………தொடரும்………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக