சனி, 8 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 170-அறிவியல் சிந்தனைகள்: சாக்ரடீஸ் , Socretes –கி.மு. 469 – 399.

 

சான்றோர் வாய் (மைமொழி : 170-அறிவியல்

சிந்தனைகள்: சாக்ரடீஸ் , Socretes –கி.மு. 469 – 399.

 

 உண்மை உயிரினும் பெரிதுநஞ்சுண்டபோதும் உண்மை பேசியவர்ஏடு எடுத்து எழுதவில்லைதெருவோரப் பரப்புரைபல அறிஞர்களை உருவாக்கிய அறிஞர் ஏன்எப்படி …? என்ற வினாக்களைத் தொடுத்து விடையங்களை விளக்கியவர்தான் சொல்லும் நெறிகளைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்துக் காட்டியவர் -  கொள்கைக்காக வாழ்ந்தவர்.

 

 ஏதென்ஸ், பல அறிஞர்களைக் கண்டதுவணிக மையம்செல்வச் செழிப்புபண்பாட்டுக் கலப்பு ஏதென்ஸ் சிந்தனைக் களமாக விளங்கியது பேரண்டத்தின் தோற்றம் இயல்பு பற்றி மனிதன் சிந்திக்கத் தொடங்கிய இடம்.

 

கல்வி கேள்விகளில் சிறந்த அறிஞர்கள் இவர்கள் நடமாடும் பள்ளிக்கூடங்கள்வாத வல்லுநர்கள்அஞ்சா நெஞ்சம் உடையவர்கள் இவர்கள் எழுப்பும் வினாக்களைக் கண்டு  அரசும் சமயங்களும் அஞ்சினஇந்த ஏதென்சில் இளைஞர்களுக்குத் தத்துவத் தாகம் ஏற்படச் செய்த சிந்தனையாளர் சாக்ரடீசு . 

இவருடைய சிந்தனைகளை இவர் மாணவர்  தன் நூலில்  (உரையாடல் ) விளக்கியுள்ளார். சாக்ரடீசு எளிய குடும்பத்தில் பிறந்தவர் ; படையில் பணிபுரிந்தவர்.

 

சாக்ரடீசுஅறிவியல் சிந்தனைகள் :

சாக்ரடீசு ஆற்றிய உரைகளில் அதிக ஈடுபாடுகொண்ட இளைஞர்கள் அவரைச் சுற்றி வட்டமடித்தனர்; இவருடைய கருத்துகளில் முரண்பட்டவர்களும் இருந்தனர்.

 

ஈடும் எடுப்பும் இல்லா நற்பேரறிஞன் சாக்ரடீசு-” என்பது கிரேக்கநாட்டுத் தெய்வ வாக்கு,

 

 எனக்கு எதுவும் தெரியாது என்பதே எனக்குத் தெரிந்த ஒன்று

உன்னையே நீ அறிவாய்..”

 சாக்ரடீசின் உயர்ந்த கோட்பாடு அறியாதன பல உண்டு எனப் பலரை அறியச் செய்தவர்.

 

மனிதனைப் பற்றிய சிந்தனையே  முதன்மையானது “ –என்றார்.

ஏதென்ஸ் நகரில் நிலவிய  தனிமனித தத்துவம்  சமுதாய அழிவை நோக்கியது. ‘வழிபாட்டு உரிமை  என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கடவுளர்கள் கற்பிக்கப்பட்டனர். மதம்/ ,சடங்குகள் பெருகின. மனித மனத்தில் நிலவும் அச்ச உணர்வை மூலதனமாகக்கொண்டு மதத் தலைவர்களும் ஆட்சியாளர்களும் வாழ்ந்தனர்.

 

நேர்மையே நற்பண்புநற்பண்பே அறிவுஉலகியல் பொருள்களிலும் போக்கிலும் வாழ்க்கை நடப்பிலும் வேறுபாடுகளும் முரண்பாதுகளும் நிறைந்திருக்கக் காணலாம். இவ்வேறுபாடுகளை நீக்கி எல்லாவற்றுக்கும் அடிப்படையாக மாறாது தங்கிநிற்கும் பொதுத் தன்மையைக் காணவேண்டும். – என்பது சாக்ரடீசின் தத்துவம்.

அரசியல் தத்துவப் புரட்சி:

 கைகளை உயர்த்தும் கும்பல் ஆட்சி முறையை வெறுத்தார்.

அறிஞர்கள் நேர்மை என்னும் நற்பண்பு நிறைந்தவர்கள் அவர்கள் தாம் ஆளவேண்டும். சிந்தனைத் திறனும் அறிவுக்கூர்மையும் இல்லாதவர்கள் அறிஞர்கள் வகுக்கும் சட்ட அமைப்பிற்குள் இருந்து ஆளப்படுதல் வேண்டும்” சாக்ரட்டீசின்அறிஞர்களின் ஆட்சிஅரசியல் தத்துவப் புரட்சியாகும்.

>>>>>>>>>>>>சாக்ரடீசு >>>>>>>>>>தொடரும் >>>>>>>

அன்புடையீர், வணக்கம் : இத்தொடர் தொடரும் மீண்டும் மார்ச்சு 16ஆம் நாள் சந்திப்போம்….!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக