செவ்வாய், 18 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 173-அறிவியல் சிந்தனைகள்: அரிஸ்டாட்டில் – Aristotle; கி.மு. 384 – 322.

 

சான்றோர் வாய் (மைமொழி : 173-அறிவியல்

சிந்தனைகள்: அரிஸ்டாட்டில் – Aristotle; கி.மு. 384 – 322.

The Father of All Sciences.

அறிவியல்துறை அனைத்திலும் அரிசுடாட்டிலின் சிந்தனை படர்ந்திருந்தது. இயற்கையை அறிவியல் கண்கொண்டு கூர்ந்து நோக்கினார்.

வாழ்க்கை வரலாறு :

பிளேட்டோவின் மாணவர் அறிவியல்கள் அனைத்திற்கும் தந்தைஅளவையியல் முறைகளை அறிமுகப்படுத்தியவர்கிரேக்கச் சிந்தனைகளை அறிவியல் நோக்கில் திருப்பியவர்பிளேட்டோவின் கருத்துக்களுக்கு எதிரானவர்அலெக்சாண்டருக்கு ஆசிரியர்இவர் தந்த அரசியல். கல்வியால் உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் ஆற்றல் பெற்றார் அலெக்சாண்டர்.

 உயிர் கொடுத்தவர் தந்தை  ; வாழ்க்கைக் கலையைக் கற்றுத்தந்தவர் அரிசுடாட்டில் ; அலெக்சாண்டர் துணையோடு உலகெங்கும் உள்ள அறிவு நூல்கள், செடிகொடிகள், விலங்கினங்கள் இவை அனைத்தையும் சேகரித்து அரிய கல்விக்கழகம் ஒன்றை நிறுவினார்.

அலெக்சாண்ட்ரியாவில் நிறுவப்பட்ட அந்தக் கல்விக்கழகத்திற்கு  ‘ லைசியம் ‘ – (……..)  என்று பெயர். இங்கு அறிவியல் வளர்க்கப்பட்டது ; அறவியல் கோட்பாடும் உருவாக்கப்பட்டது.

 உலகை வென்று திரும்பிய மாவீரன் பாபிலோன் நகரில் மாண்டு போனான். அலெக்சாண்டர் விரும்பியதை நிறைவேற்ற படைத்தளபதி  ’சிலியோமீனிசு’ நைல் நதிக்கரையில் “அலெக்சாண்ட்ரியா என்ற அரிய நகரை நிறுவினான். அங்கு ஏற்படுத்திய பல்கலைக் கழகத்தில் உலகில் உள்ள விஞ்ஞானிகளையு,ம் விஞ்ஞான நூல்களையும் ஒன்று சேர்த்தான். கிரேக்க விஞ்ஞானிகள் அனைவரும் அலெக்சாண்ட்ரியா வந்து சேர்ந்து தங்கள் விஞ்ஞானப் பணியைத்துவக்கினர். அப்பல்கலைக் கழகத்தில்  ஏறத்தாழ ஐந்து இலட்சம் நூல்கள் இருந்தன.

கொடுமைகள் அரங்கேறின:

 ”கி.பி. 800இல் முசுலீம்களின் ஆளுகைக்குப் பண்டைய உரோமப் பேரரசின் பகுதிகள் அனைத்தும் வந்துவிட்டன. அரேபியாவும் பாரசீகமும் சிசிலியும் வட ஆப்பிரிக்காவும் மேற்கு இந்தியாவும் முசுலீம்களின் கரங்களில் சிக்கின. முசுலீம் தலைவர்களில் ஒருவரான அமீர், அலெக்சாண்ட்ரியாவில் கிரேக்க மக்களால் சேகரிக்கப்பட்டு வைத்திருந்த அறிவியல் நூல்கள் அனைத்தையும் நெருப்பிலிடுமாறு உத்தரவிட்டார், நூல் நிலைய நிருவாகிகள் எவ்வளவு எடுத்துரைத்தும் அமீர் செவியில் எதுவும் ஏறவில்லை ! “மக்களுக்குத் தேவையானவை அனைத்தும் திருக்குரானில் கூறப்பட்டுவிட்டன. மேலும் அதில் கூறாதது எதுவாயினும் இந்நூல்களில் இருப்புன், அது மதத்திற்கு விரோதமாகும் ; எனவே உடனே நெருப்பிடுங்கள்” என்றார்.

அலெக்சாண்ட்ரியா நூல் நிலையத்திலிருந்த அரும்பெரும்  அறிவியல் செல்வங்களை ஆறுமாத காலம் அமீரின் படைகள் நாலாயிரம் வெந்நீர்த் தொட்டிகளில் தினசரி இட்டு  எரித்துக் குளித்தனர். உள்ளத்தில் அழுக்கை நிரப்பிய அவர்கள் உடலில் அழுக்குப்போக அவ்வெந்நீரில் குளித்திருப்பர். “ – மருத்துவர் எச். செல்வராசு, மனித வரலாற்றில் மூன்று இலட்சம் ஆண்டுகள், பக்.70-71.

அரிசுடாட்டில் தொடாத துறைகளோ, எழுதாத நூல்களோ இல்லை எனலாம்.

…………………அரிசுடாட்டில்………………தொடரும்…..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக