புதன், 26 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 181 -அறிவியல் சிந்தனைகள்: புளோடினஸ்-(PLOTINUS.கி.பி. 240 - 270.)

 

சான்றோர் வாய் (மைமொழி : 181 -அறிவியல்

சிந்தனைகள்: புளோடினஸ்-(PLOTINUS.கி.பி. 240 - 270.)    

பிளேட்டோவிய மறுமலர்ச்சி NEO  PLATONISM.      

 புளோட்டினசு இவ்வியக்கத்திற்கு வித்திட்டவர்.

அரிசுடாட்டிலுக்கிப்பின் கிரேக்கத் தத்துவம் இருளடைந்தது.

சாக்ரட்டீசு, பிளேட்டோ. அரிசுடாட்டில் ஆகியோர் கட்டிக்காத்த மாபெரும் சிந்தனைக் கோட்டை பேணுவாரற்றுப் பொலிவிழந்தது. நால்வகைக் கோட்பாடுகளை மக்கள் மனத்திற்கேற்றவாறு எடுத்துக்கொண்டனர்.

பிளோட்டினசு ரோம் நகரில் தத்துவப்பணிகளை மேற்கொண்டார். ரோம் அரசியல் அமைதியின்றி சீரழிந்து கிடந்தது. தத்துவங்களை மக்கள் செவிமடுக்கவில்லை.

பிளேட்டோ,அரிசுடாட்டில் ஆகியோரின் தத்துவங்களில் உள்ள ஒத்த கருத்துகளை ஒருங்கிணைத்து கிரேக்கச் சிந்தனைக்கு உயிரூட்டினார். ‘முழுமுதல் ஒன்றுஎன்பதிலிருந்து இவ்வுலகும் பொருள்களும் உயிர்களும் வந்தன என்பதும் அவை மீண்டும் முழுமுதல் ஒன்றுடன் இணைந்திட முயல்கின்றன என்பதும் இவருடைய தத்துவத்தின் மையக் கருத்து.

 முழுமுதல் ஒன்றுஇவ்வுலகையும் உயிர்களையும் வெளிப்படுத்தியதோடன்றி அவையாவும்  மீண்டும் தன்னை வந்து சேர்வதற்கான ஆற்றலையும் ஆர்வத்தையும் தந்துள்ளது.

 பழமையான கிரேக்கச் சிந்தனைகள் புளோட்டினால் புதுப்பிக்கப்பட்டன. இவருடைய தத்துவங்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் கிறித்துவ சமயத்தில் இடம்பெற்றன. கி.பி. 7ஆம் நுர்றாண்டு வரை இவருடைய  தத்துவத் தாக்கம் நிலவியிருந்தது.

……………..தொடரும்……………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக