சான்றோர் வாய் (மை) மொழி :
180-அறிவியல்
சிந்தனைகள்:
நால் வகைக் கோட்பாடுகள்:
4, நடுநிலைக் கோட்பாடு: -சீனோ.
”இன்ப துன்ப நிலைகட்கு இடைப்பட்ட
மன அமைதியே வாழ்வின் குறிக்கோள்” என்பது இக்கோட்பாடு.
புலனுக்குட்பட்டும்
‘பொருள்முதல் கோட்பாட்டை வற்புறுத்தினார். உயிர்,
உடல் கடவுள் அனைத்துமே பொருள்மயம் என்றார். நெருப்பே
இப்பிரபஞ்ச உற்பத்திற்கு மூலம் என்றார். உற்பத்தியும் அழிவும்
இயற்கையின் முடிவில்லாத தொடர் நிகழ்ச்சி. இயற்கை என்ற முழுமையால்
கடவுளும் ஓர் அங்கம். இயற்கையில் காணப்படும் இயைபினைக்கொண்டே
நன்றெனப்படுவதை நாம் அறிய முடியும்.
ஒருவனுடைய நற்பண்பிற்கு
மன உறுதியே காரணம். புறச் சூழல்களையும் பிறவற்றையும் காரணம்
காட்டி தன் பொறுப்பினைத் தட்டிக் கழிக்க முடியாது. அறமே இறுதிப்பயன்.
அறப்பண்பை வளர்க்காத தத்துவம் கனிதரா மரங்கள் நிறைந்த காடு என்றார்
சீனோ.
……………..தொடரும்……………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக