சான்றோர் வாய் (மை) மொழி :
171-அறிவியல்
சிந்தனைகள்:
சாக்ரடீஸ்-2- Socretes –கி.மு. 469 – 399.
இவரை , நாத்திகண், தேசத்துரோகி,
இளைஞர்கள் மனத்தில் நச்சுக் கருத்துகளை வளர்ப்பவன் எனக் குற்றஞ் சாற்றினர்.
“ ஒன்றே கடவுள் என்பது குற்றமென்றால், சிந்திக்காது செயல்படும் கண்மூடிப்பழக்கம் ஒழிய வேண்டும் என்றது குற்றமென்றால்
நான் குற்றவாளியாகவே இருக்க விரும்புகிறேன்” என்றார்.
மரண தண்டனை:
மதவாத அரசு சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதித்தது. கொஞ்சம் கொஞ்சமாகௌயிரைப் பறிக்கும் “எம்லாக்” என்னும் நஞ்சு அருந்தி சாக வேண்டும்,
அரசின் ஆணை கேட்டு நல்லவர்கள் வருந்தினர் ; சிந்தனையாளர்கள்
மனம் கொதித்தனர்.
இறக்கப்போகும் உனக்கு இறுதி ஆசை என்ன என்று கேட்டனர்
கொலைஞர்கள் …………..
“ நண்பா, கிரிட்டோ…!
அசலிபியசுக்கு சேவல் ஒன்று கடன்பட்டிருக்கிறேன் ; என் கடனைத் தீர்ப்பாயா..? சாக்ரடீசின் இறுதி வார்த்தைகள் இவையே..!
சிந்தனைத் திறனில்லாதவர்கள் எடுத்த அவசர முடிவால் ஞான உரு ஒன்று
அழிந்துவிட்டது.
ஏதென்சு நகர வீதிகளிலும் நிழல் பகுதிகளிலும் ஓய்வின்றி
உலா வந்த கால்கள் நிலையாக ஓய்ந்துவிட்டன.
அறிவுப் பேரொளியை வார்த்தைகளாக வடித்துக் கொட்டிய வாய் செயலிழந்துவிட்டது.
ஞானத் தீயுமிழ்ந்த கண்கள் மூடிக்கொண்டன.
சாக்ரடீசின் உடல் மண்ணில் மறைந்து விட்டது.
ஏதென்சு நகரம் என்றோ இழைத்த அநீதிக்கு மனித இனம் மனம் நோக இன்றும்
வருந்துகின்றது ;
மன்னிப்புக் கோரி சாக்ரடீசிடம் மண்டியிடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக