ஞாயிறு, 23 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 178-அறிவியல் சிந்தனைகள்: நால் வகைக் கோட்பாடுகள்:

 

சான்றோர் வாய் (மைமொழி : 178-அறிவியல்

சிந்தனைகள்: நால் வகைக் கோட்பாடுகள்:

 

1.)     இன்பநிலைக் கோட்பாடுஎபிகூரஸ்- EPICURAS.கி.மு. 342.

வாழ்வின் உறுதிப்பொருள் இன்பத் துய்ப்பே ! இதனை உருவாக்கியவர் எபிகூரசு . இவர் எபிகூரசு சிந்தனைத் தோட்டம் எனும் பள்ளியை நிறுவியவர். மரணத்திற்குத் தன்னை விருந்தாக்கி மகிழ்ந்தவர். 

மரணத்தின் வாயிலில் நிற்கும் நான்  மகிழ்கின்றேன். நோயின் பெரும் பசிக்கு என்னுடைய இரப்பையும், சிறுநீரகங்களும் உணவாகின்றன. உன்னோடு கலந்துரையாடிய அந்த நாட்களை நினைவுகூறும்போது  என் நெஞ்சம் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறது.” என்றார்.

 இவர் தத்துவம் பொருள்முதல் தத்துவம். இப்பேரண்டமும் அதன் பொருள்களும் அணுக்கூட்டத்தால் ஆன பொருளே. அணுக்களின் சிதைவால் உடல் அழியும்போது உயிரும் அழிந்து விடுகின்றது. உயிர் என்ற ஒன்று தனியே உண்டு . அதற்கு இறவாமை என்ற ஒரு பண்புண்டு என்பதெல்லாம் வெறுங் கற்பனையே..!

மனித வாழ்வு இறைவன் எழுதிய தீர்ப்பின்படி நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் செல்கிறது என்பதும் வெற்றுக் கற்பனையே …! மனிதனை அடிமையாக்கும் சமயங்கள் புனிதமற்றவை.

……………………………தொடரும்…………….    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக