திருக்குறள் -சிறப்புரை
:968
மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து .—௯௬௮
(மருந்தோ மற்று ; ஊன் ஓம்பும்; பீடு அழிய )
மனிதன் பெருந்தகுதி உடையவனாக
விளங்கக் காரணமாயிருப்பது மானம் ஒன்றே. மானம் அழிய நேரிட்டபோது உயிரை விட்டொழிக்காமல்
தன்னுடைய ஊனுடலை அழியாமல் காக்க விரும்பும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தாகுமோ..?
“தம்முடை ஆற்றலும் மானமும்
தோற்று தம்
இன்னுயிர் ஓம்பினும் ஓம்புக
– பின்னர்ச்
சிறுவரை ஆயினும் மன்ற தமக்கு
ஆங்கு
இறுவரை இல்லை எனின்.
–நீதிநெறி விளக்கம்.
தமக்கு இனிமேல் இறத்தல் இல்லையென்று
உறுதியாக உணர்ந்தார், தம் வலிமையையும் மானத்தையும் இழந்தேனும் தம் உயிரைப் பாதுகாக்க.
மானம் முக்கியமல்ல !மானம் வரும் போகும் ! ஆனால் மானத்தைவிட — தன் —உயிரை யும்உடலையும்கா ப்பாற்ற வேண்டும் என்பதுதான் அவர்மி கூறும் உயர்ந்த சரியான கருத்து என்று நான் நினைக்கிறேன்
பதிலளிநீக்கு