சான்றோர் வாய் (மை)
மொழி :12.-முரஞ்சியூர் முடிநாகராயர். உலகத் தோற்றம் – 2.
”மண் தினிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை”
………………………… :புறநானூறு, 2.
அணுக்கள் செறிந்த நிலனும் ;அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும்;
அவ்வாகாயத்தைத் தடவி வரும் காற்றும்; அக்காற்றின்கந்தலைப்பட்ட தீயும் ;
அத்தீயோடு மாறுபட்ட நீரும் ; என ஐவகைப்பட்ட பெரிய பூதத்தினது தன்மை
போல… இவ்வுலகம் விளங்குவதாகக் கூறுகின்றார் புலவர்.
தொல்தமிழர்களின் சிந்தனைகள் இவ்வாறிருக்க, கி.பி.13 ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்த , வெடி மருந்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ’ரோஜர் பேக்கன்,’ இந்த
உலகம் உருண்டையானது என்று கூறினார், அவருக்குப் பின்னே கி.பி. 17 ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய விஞ்ஞானி ‘கலிலியோ’ உலகம்
உருண்டையானது என்று அறிவியல் வழி மெய்ப்பித்தார். அக்காலத்தில் இவ்விரு
அறிவியல் ஞானிகளுக்கும் கிடைத்த பரிசு, சிறைத்தண்டனை ; கிடைத்த பட்டம்
பைத்தியக்காரர்கள்.
தொல்காப்பியர் காலந்தொட்டே அறிவியலைப் புரிந்து போற்றும் அளவிற்குத்
தமிழர்களுக்கு அறிவு இருந்தது, அதனாலன்றோ தொல்காப்பியர், திருவள்ளுவர்
உள்ளிட்ட சான்றோர் பெருமக்கள் இன்றும் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக