செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :15.- உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :15.- உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.

 மகட்பேறு.

“சிறப்புஇல் சிதடும் உறுப்புஇல் பிண்டமும்

கூனும் குறளும் ஊமும் செவிடும்

மாவும் மருளும் உளப்படவாழ்நர்க்கு

எண்பேர் எச்சம் என்றுஇவை எல்லாம்

பேதைமை அல்லது ஊதியமில் என

முன்னும் அறிந்தோர் கூறினர்…. புறநானூறு, 28

சிறப்பில்லாத குருடும் வடிவற்ற தசைப் பிண்டமும் கூனும் குறுகிய தோற்றமும் ஊமையும் செவிடும் விலங்கு வடிவிலான தோற்றமும் அறிவின்றி மயங்கி இருப்பதும் ஆகிய எட்டுப் பெரிய குறைபாடுகள் மக்கள் பிறப்பில் உள்ளன. இவ்வுலகில் வாழ்வார்க்குப் பேதைத் தன்மையிலான பிறப்புகள், இவற்றால் யாதொரு பயனும் இல்லை என  நன்கு அறிந்தோர் முற்காலத்தில் கூறியுள்ளனர் என்று எடுத்தியம்புகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக