செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :20. பரிமேலழகர்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :20. பரிமேலழகர்.

“கொலையின் கொடியாரை   வேந்துஒறுத்தல் பைங்கூழ்

களை கட்  ட தனொடு நேர். 550.

இக் குறட்பாவிற்கு உரை வகுத்த பரிமேலகழகர், ’கொடியவர்’ குறித்து விளக்குவதாவது…”கொடியவர் என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர்,ஆறலைப்படார், சூறை கொள்வார், பிறன் இல் விழைவார் என்றிவர் முதலாயினரை ; இவரை வடநூலார் ‘ஆததாயிகள்’ என்ப. என்றவாறு பரிமேலழகர் கொடியவர்கள் பட்டியலை வடநூலார் வழிநின்று கூறுவதேன்?  திருக்குறளுக்கு வடவர் கருத்துகளை ஒப்பிட்டு உரை வகுப்பது அவரின் வழக்கமாகும் என்பதற்கு

இவ்வுரையும்   சான்றாக விளங்குகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக