திங்கள், 26 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :19. பரிமேலழகர்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :19. பரிமேலழகர்.

   திருக்குறள் அதிகாரம்-46: சிற்றினம் சேராமை, இவ்வதிகாரத்தின் குறிப்புரையில் சிற்றினத்தார் யாவர் என்பதைக் குறித்து…..”அஃதாவது சிறிய இனத்தைப் பொருந்தாமை, சிறிய இனமாவது ‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்’ என்போரும் (புறநானூறு -29.) விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு. அறிவைத் திரித்து இருமையும் கெடுக்கும் இயல்பிற்றாய அதனைப் பொருந்தின் பெரியாரைத் துணைக்கோடல் பயன் இன்று என்பது உணர்த்தற்கு இஃது அதன் பின் வைக்கப்பட்டது. என்று கூறியுள்ளார்.

இக்குறிப்புரையில்  அவர் குறிப்பிட்டவாறு ‘விடர் = காட்டுமிராண்டிகள் ;தூர்த்தர் = காமுகன் ;  நடர் = கூத்தாடிகள்  முதலிய குழுவினர்கள்  சிற்றினத்தவர் ஆவர்.

இவர்களோடு ஒட்டும் உறவுமின்றி  மக்கள்  வாழ்வாராயின் நாடு நலம் பெறும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக