புதன், 2 ஜூலை, 2025

தமிழமுது – 63 .திருக்குறள் பரிமேலழகர் உரைத்திறன்: சான்றோர் சிந்தனை:

 

தமிழமுது – 63 .திருக்குறள் பரிமேலழகர் உரைத்திறன்: சான்றோர் சிந்தனை:

உயர்ந்த இலக்கியங்கள் உரையாசிரியர்களால் நுட்பமான உரைகளும் நயமான விளக்கங்களும் பெற்றுச் சிறப்படைந்தன. உரைகளும் விளக்கங்களும் எழுதியவர்கள் இலக்கிய வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் நல்ல தொண்டு புரிந்தார்கள். எட்டாம் நூற்றாண்டில் களவியல் என்னும் நூலுக்கு நக்கீரர் என்னும்  உரையாசிரியர் எழுதிய உரையே அவ்வகையில்  பழமையானது.

திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பத்து அறிஞர்கள் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதியார், காளிங்கர், பரிப்பெருமாள், திருமலையர், மல்லர், பரிமேலழகர்.

 

 வடமொழியறிவும் தமிழ்மொழிப் புலமையும் உடைய இவரது உரையைப் பாராட்டிபரித்த உரையெல்லாம் பரிமேலழகர் தெரித்த உரையாமோ தெளிஎன்று புலவர் போற்றுவர். இவரது காலம்…….. இவர் காஞ்சிபுரம் அர்ச்சகர் மரபில் வந்தவர் என்பர்.

 வடமொழி நூல்களின் கருத்துகளைத் தழுவியும் ஒப்பிட்டும் உரை எழுதும் போக்குடையவர். அதனால் சில இடங்களில் நூலாசிரியரின்  உண்மைக்கருத்தை  உணரமுடியாமற் போயினும் பல இடங்களில் திருக்குறளின் பொருள் ஆழத்தையும் நயத்தையும் நன்கு புலப்படுத்தியுள்ளார்.

 ஓரிடத்தில் கூறியதை மறுபடியும் கூறாத செறிவும் உணர்த்தும் பொருளுக்கு ஏற்றபடி சொற்களை வரையறுத்து  நிறுத்து எழுதும் திறனும் இவருடைய உரையின் சிறப்பியல்புகள்.

 பால்பகுப்பு முறை,, அதிகார வைப்பு முறை ஆகியவற்றைத் தொடர்புபடுத்திக்காட்டும் உரைப் போக்கினை இவரிடத்தில் காண்கிறோம். மேலும் ஓர் அதிகாரத்திற்குள்ளேயே குறள் வைப்பு முறையின் பொருத்தத்தைக்காட்டி ஆங்காங்கே அவற்றை வகைப்படுத்தி முடிவுகட்டும் திறனையும் இவரிடத்தில் காணலாம்.”

………………………….தொடரும்……………………………

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக