செவ்வாய், 22 ஜூலை, 2025

தமிழமுது –.78 . தமிழர் - அறநெறி வாழ்வியல். காதல் - காமம்- கண்கள் வெளிப்படுத்தும் அறிகுறிகள்.

 

தமிழமுது –.78 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.

காதல் - காமம்- கண்கள் வெளிப்படுத்தும் அறிகுறிகள்.


 காமம் சொல்லா நாட்டம் இன்மையின்

ஏமுற இரண்டும் உளவென மொழிப.-தொல்காப்பியம்.

காதல் உணர்வை வெளிப்படுத்தாத கண்கள் இல்லாததால், பெருமை பொருந்திய நாணமும் மடனும் ஆகிய இரண்டும் உள்ளன என்று கூறுவர்.

 

காதல் கண்கள்வழியே வெளிப்படும்:

நோக்கு எனும் சொல்லேகாதல் பார்வைஆகும்.

“காலே பரிதப்பினவே கண்ணே

நோக்கி நோக்கி வாளிழந்தனவே”

காதலன் வரவை எதிர்நோக்கி கண்கள்  ஒளி இழந்த்தது.

  (குறுந்தொகை)

 சிலம்பில் இளங்கோவடிகள்,

“செங்கண் ஆயிரம் திருக்குறிப்பருளவும்

கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து.”

எனக் கண்கள் ஆயிரம் குறிப்புகள் காட்டும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை ஆடற்கலையில் வைத்துக்காட்டுகின்றார்.

 

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலர் கண்ணே உள. –குறள்:1099.

அயலார் போல் நின்று  பொது நோக்கு நோக்குதல் மனத்தில் காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பாகும்.

 

கண்ணும் கண்ணும் பரிமாறும் காதல் உணர்வுகளைத் திருவள்ளுவர் , தகையணங் குறுத்தல், குறிப்பறிதல், நலம்புனைந்துரைத்தல், காதல் சிறப்புரைத்தல், அலரறிவுறுத்தல், பிரிவாற்றாமை, படர் மெலிந்திரங்கல்,  கண்விதுப்பழிதல் ஆகிய அதிகாரங்களுள் மிக விரிவாக எடுத்துரைக்கின்றார்.

 

“ எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி

கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள.” –கம்பன் காவியம்.

பழைய திரைப்படப் பாடல்கள்:

கண்ணில் தோன்றும் காட்சியாவும் கண்ணே உனது காட்சியே

மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே.”

 

“காளைக் கன்றுபோல் உருவம் கொண்ட ஆள் ஒருவன்

நின்று போட்ட ஒரு பார்வையிலே – என்னைக்

கொன்று விட்டானடி மாமயிலே.” என்று ஆடவர் காதல் பார்வையின் ஆற்றலைக் குறித்துள்ளார் கவிஞர்.

‘பம்பரக் கண்ணாலே காதல்

சங்கதி சொன்னாளே

தங்கச் சிலைபோல் வந்து

மனதைத் தவிக்க விட்டாளே.”

 

“தென்றல் உறங்கிய போதும்

திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா காதல்

கண்கள் உறங்கிடுமா..?”

 

 பார்வையிலே நோய் கொடுத்தாய்

கன்னியிளமானே

பக்கம் வந்து தீர்த்து வைப்பாய்

கன்னியிளமானே.”

 என்றவாறு கண்கள் காதல் உணர்வை வெளிப்படுத்தும் அழகைக் காணலாம்.

 

Pl. donate:

R.KUMARAN,Thanjavur.

Account No: 0914101167707

IFSC CODE : CNRB 0001854

MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக