தமிழமுது –.72 . தமிழர் இயற்கை வழிபாடு.
ஆன்மா, அழிவதில்லை….?
ஆன்மா:
”ஆசை அற்றபோது அந்த மனிதனிடம் அதிசய சித்திகள்
பெருகி எழுகின்றன. நிராசையாளன் நித்திய சோதியாய் நிலவுகின்றான். ஆசை ஒழிந்த அளவு அந்த
ஆன்மா ஈசன் ஆகிறது.” என்றார் காந்தியடிகள்.
மாயை:
சீவர்கள் உண்மைநிலையை உணராமல் பொய்யான
மையல் மயக்கங்களில் இழிந்து உழலும் மருள் நிலை.
நில்லாத பொருள்களை நிலையின என்றும்
இடையே தேக சம்பந்தமாய் எய்தியுள்ள மனைவி, மக்கள் முதலிய மாயத் தொடர்புகளை மெய் என்று
நம்பியும் மயங்கி உழல்பவர்கள் மாயைவசப்பட்டவராவர். ; அவர்கள் ‘அஞ்ஞானிகள்’.
மெய்ஞ்ஞானிகள் பாசத் தொடர்புகளை அறவே அற்றுவிடுகின்றனர்;
விடவே ஈசனைத் தோய்ந்து இன்புறுகின்றனர்.
யோகம்:
சீவான்மா
பரமான்வை மருவி மகிழ்கின்ற புனித நிலையே யோகம். யோகம் ,தியானம், என்பன மகான்களுடைய
மேலான நிலைகளைக் குறித்துவருகின்றன.மனம் இறைவனிடம் மருவினால் பிறவி தீரும், பேரின்பம்
விளையும்.இலயம் – அடங்கி ஒடுங்கும் நிற்கும் நிலை.
‘உணர்வினால் உம்பர் ஒருவனை அவனதருளால் உறற்பொருட்டு
என்
உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது
இன்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உவப்பினவும்
பழுதேயாம்
உணர்வைப் பெறவூர்ந்திற வேறியானும் தானாய் ஒழிந்தானே.”
என்கிறது திருமந்திரம்.
மனிதன் யார்:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகுஅவாம்
பேரறிவாளன் திரு.-குறள்.215.
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்
செல்வம்
நயனுடை யான்கண் படின். -216.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான் கண்படின். 217.
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு
ஒல்கார்
கடனறி காட்சி யவர். -218.
மேற்குறித்தவற்றால் திருவள்ளுவர் மனிதத்தன்மையின் பெருஞ் சிறப்பைப் போற்றி உரைப்பதைக்
கண்டு தெளிக.
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக