வியாழன், 10 ஜூலை, 2025

தமிழமுது –.70 . தமிழர் இயற்கை வழிபாடு. ஆன்மா, அழிவதில்லை….?

 

தமிழமுது –.70 . தமிழர் இயற்கை வழிபாடு.

ன்மா, அழிவதில்லை….?

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது – குறள் – 235.

 உயிரும் உடலும் போனபின்பு, புகழ் உடம்பு என்றும் நிலைத்து நிற்கும் ; அவர்கள் இறந்தாலும் இருப்பவர்களே., சான்றோர்க்கன்றி மற்றவர்களுக்குக் கிடைக்காது.

தொல்காப்பியர் இறந்துவிட்டார் ; திருவள்ளுவர் இறந்துவிட்டார் ஆயினும் அவர்களை நாம் தொல்காப்பியர் கூறுகிறார் ; திருவள்ளுவர் எடுத்துரைகின்றார் என்றே கூறுகின்றோமேயன்றி ; மறைந்த தொல்காப்பியர் என்றோ  காலஞ்சென்ற திருவள்ளுவர் என்றோ கூவதில்லையே…! சான்றோர்கள் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

 

நல்லோர் ஆன்மா அழிவதில்லை,  அவர்கள் உடம்பு  இல்லை ; அவர்தம் உயிர் நம்மை இயக்குகிறது. நற் செயல், நற்சிந்தனை,  காலத்தைவென்று வாழும் புகழ், இவற்றை உளங்கொண்டு வாழ்வோர் நல்லவர்களே.  தீமை புரிவோர் தியானத்தால் மன அமைதி பெறமுடியாது. உயிர் உடலிலிருந்து ஆற்றும் பணியளவே உயிர் ஆன்மா ஆகிறது.

 

 “ஒருவனது யாக்கை ஊன்பயில் நரம்பில்யாத்த

உருவமும் புகழும் என்றாங்கு அவற்றின் ஊழ்காத்து வந்து

மருவிய உருவம் இங்கே மறைந்துபோம் மற்றயாக்கை

திருவமர்ந்து உலகம் ஏந்தச் சிறந்து பின் நிற்கும் அன்றே”  -சூளாமணி.

ஊன் உடம்பு  - அழியும் நற்செயலின்றி பெயர் விளங்காது போதல்.

ஒளியுடம்பு – புகழால் நிலைத்து நிற்கும்.

 

 “கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்

மலரவன் வண்தமிழோர்க்கு ஒவ்வான் – மலரவன் செய்

வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு

மற்றிவர் செய்யும் உடம்பு. “ நீதிநெறி விளக்கம்.

பரமன் படைத்த உடம்புகள் அழிகின்றன

புலவர் படைத்த புகழ் உடம்பு அழிவதில்லை.

.………………………தொடரும் ------------------------------

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக