வெள்ளி, 25 ஜூலை, 2025

தமிழமுது –.81 . தமிழர் - அறநெறி வாழ்வியல். காமக் களிப்பு- பேரின்பம்: பெண்டிர்.

 

தமிழமுது –.81 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.

காமக் களிப்பு- பேரின்பம்: பெண்டிர்.

 

காதலன் செய் த கலக்குறு நோய்க்கு ஏதிலார்

எல்லாரும் தேற்றார் மருந்து.”- கலித்தொகை.

 நிலவே…..!மனக் கலக்கத்தைத் தருகின்ற காதலன் செய்த காமநோய்க்கு உன்னைத்தவிர அயலில் உள்ளார் எவரும் அதற்கொரு மருந்தைத் தெளிவாகக் கூறார்.என்றாள் தலைவி.

 

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு. குறள் ;1251.

நற்குணங்களாகிய நிறை என்னும் கதவினை, நாணம் என்னும் தாழ்ப்பாள் இறுக்கியுள்ளபோதும் காமம் என்னும்  கோடரி அதனை உடைத்தெறியும்.

 

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றி

தும்மல்போல் தோன்றி விடும்; குறள். 1253.

காம வேட்கையை என்னுள் மறைத்துக் கொள்ள விரும்பினேன், ஆயினும் முன்னறிவிப்பு ஏதுமின்றித் தும்மலைப்போல் அடக்கவியலாது வெலிப்பட்டு விடுகின்றது.

பதிவிரதையான துரோபதை பெண்களின் மனநிலைய கூறுவாளாக;;;

ஐம்புலன்களும் போல் ஐவரும் பதிகள்

     ஆகவும் இன்னம் வேறு ஒருவன்

எம்பெருங் கொழுநன் ஆவதற்கு உருகும்

     இறைவனே எனது பேர் இதயம்

அம்புவி தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும்

     ஆடவர் இலாமையின் அல்லால்

நம்புதற்கு உளதோ என்றனன் வசிட்டன்

     நல்லற மனைவியே அனையள்.” பாரதம்.,

இவளையே ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி என்று தமிழ் மக்களிடையே ஒரு பழமொழி வழங்கி வருவதைக் காணலாம்.

 பெண்ணின்பம் பேரின்பம் :

கண்களால் நேரேநாம் கண்டு களித்து

      உவக்கின்ற காட்சி இன்பம்

பெண்கள் பால் நுகர்கின்ற பேரின்பம்

    இவையன்றிப் பிறிது வேறே

எண்களால் உண்டென்று மருண்டு எண்ணும்

     மறுமை முத்தி என்ப எல்லாம்

மண்கள்பால் அறியாத மானுடர்தம்

     மருளான மடமை யாமே.”- சார்வாகம்.-

என்று உலகாயதக் கொள்கையர் பாடிய பாடல் கருத்தினை உற்று நோக்கின்  பேரின்பத்தின் பெருமையினை  விளங்கிக் கொள்ளலாகும்.

Pl. donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக