புதன், 16 ஜூலை, 2025

தமிழமுது –.75 . தமிழர் இயற்கை வழிபாடு. காதல் – காமம் . அறநெறி வாழ்வியல்.

 

தமிழமுது –.75 . தமிழர் இயற்கை வழிபாடு.

காதல் – காமம் . அறநெறி வாழ்வியல்.

 தமிழர் வாழ்வியலில்  தொல்காப்பியர் வழிநின்று அறியலாம்.

“ வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று

ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே.”

 யாவர்க்கும் தெரிந்து மணந்து கொள்ளுதல் ;  யாருக்கும் தெரியாது (களவு மணம்) மணந்து கொள்ளுதல் எனத் திருமணமுறை இரு வகைப்படும் என்பார். இவ்விருவகைத் திருமணமுறை இன்றளவும் தமிழ்ச் சமுதாயத்தில் நின்று நிலவுவதை நாம் அறிவோம்.

களவு கற்பு எனக் கண்ணிய ஈண்டையோர்

உளம் நிகழ் அன்பின் உயர்ச்சி மேன” என்கிறது இறையனார் களவியல்.

களவு என்றும் கற்பு என்றும் புலவர்களால் வகுத்துரைக்கப்பட்ட ஒழுக்கங்கள் இவ்வுலகத்தில் பிறந்தோர்தம் (தலைவன், தலைவி) உள்ளத்தின்கண் நிகழ்கின்ற  அன்பினது உயர்வின் அளவைப் பொறுத்தே அமையும்.

களவு மணமும் கற்பில் நிறைவுறும் என்பர்.அஃதாவது ஒருவனுக்கு ஒருத்தி எனும் அறவழி வாழும் வாழ்க்கையைச் சுட்டும். காதல் என்பது உயிர் இயற்கை.

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான் அமர்ந்துவரூஉம் மேவற்றாகும். – தொல்காப்பியம்.

 இன்ப விழைவு என்பது உலக உயிர்கள் அனைத்திற்கும் மனம் பொருந்தி வரும் விருப்பமுடைமை ஆகும்.

 அத்தகைய இன்ப விழைவே காமம் ; பருவத்தில் விளையும் பாலியல் எழுச்சியே காமமாகும். இஃது ஓர் இயற்கை நிகழ்வே எனினும் அதற்கான ஒழுக்கங்களைச் சான்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

 

.………………………தொடரும் ------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக