தமிழமுது –.67 . தமிழர் இயற்கை வழிபாடு.
அறிவு வழிபாடு:
சூரியனைக் கொண்டு தொடங்கும் ஆண்டைப்போல
வியாழனை அடிப்படையாகக் கொண்ட ஆண்டும் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. கி.பி. 12 வரை சேர பாண்டிய நாடுகளில் அக்கணக்கு முறையே இருந்தது. சூரியனை ஒரு சுற்று, சுற்றிவர தோராயமாக 12 ஆண்டுகள் (11.86) ஆகும் எனக் கணக்கிட்டு அதனால் ஆண்டுக்
கணக்கை 5 சுற்றுகளாக நெறிப்படுத்தி 60 ஆண்டுகளை
வரையறை செய்தனர். இவ்வாண்டுக் கணக்கு மறைந்தது. அதன் எச்சமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடந்தையில் கொண்டாடப்படும்
மகாமகம்.
தமிழிசை :
தமிழ் இசை வானியலோடு தொடர்புடையது.
ஓம் பிரணவ மந்திரம் – அறிவியல் குறியீடு. இப்பேரண்டம் பெருவெடிப்பில் பிறந்தது என்பர்.
பெரு வெடிப்பில் காற்று உருவானது – வளி.
வெப்பச்சுழலில் காற்று மோத உருவானது
– தீ
நெருப்பு குளிர்ந்து – மழை / பனி
-- நீர்.
நீரை அடுத்து இருந்தது – நிலம்.
இந்நான்கும் செழிக்க நின்றது – வான்.
சங்க இலக்கியத்தில் கடவுள் – துறவி / அறிஞர்கள்
– வாழ்வியல் நெறிகளைப் போதித்தனர்.
“நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின். “ –தொல்காப்பியம்.
கடவுள் நண்ணிய பாலோர் போல’
என்பர்.
திருக்குறள் கடவுள் வாழ்த்து
மா மனிதர்களைப் பற்றியது.
சிவன் பூ, எருக்கம். – மணமாகாத ஆண் இரந்தால் எருக்கம் பூ மாலையிடுவர். சிவன் - ஆலமரம் – துறவி
வடிவம்.
தமிழமுது –.68 . தமிழர் இயற்கை வழிபாடு.
ஆசிவகம் :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக