தமிழமுது –.73 . தமிழர் இயற்கை வழிபாடு.
ஆன்மா, அழிவதில்லை….? பேரின்பம் – சிற்றின்பம்
பேரின்பம்:
தமிழக வரலாற்றில் பிற்காலச் சோழர்கள் ஆட்சியில்.கி.பி.
850 -1350. வரையிலான காலம் ஒரு தனிச் சிறப்புடைய
காலமாகும். பிற்காலத்திய சாத்திரங்களும் புராணங்களும்
சிற்றிலக்கியங்களும் நன்கு வளர்ச்சியடைந்து, சோழர் காலத்தில் சிறப்புற்றிருந்த சைவ,
வைணவ சமண, பெளத்தக் கொள்கைகளை வற்புறுத்த எழுந்த காப்பியங்களும் இறைவன் இயற்றிய அற்புதங்களையும் தொகுத்துரைக்கும் புராணங்களும் மக்களிடையே பரவின.
இராசராசன் தொகுத்தளித்த சைவசமய இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகளாக உருப்பெற்றன. வைணவ சமய வளர்ச்சிக்கு
பன்னிரு ஆழ்வார்கள் அருளிச்செய்த பாடல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தமாக உருப்பெற்றது.
இவைபோன்று சமண பெளத்த காப்பியங்களும் எழுந்தன.
அரசு ஆதரவுடன் சைவசமயம்
தழைத்தோங்கியது, கோயிகள் பெருகின மக்கள் இறையருள் பெற விழைந்தனர். இறைவனைத் தொழுது பிறவிப்பயனைத் துய்க்க விரும்பி
மீண்டும் பிறவாதிருக்க வேண்டினர். இறைவனின் பேராற்றலை எடுத்தியம்பும் பாடல்கள் வழி
அவனை வழிப்பட்டுப் பேரின்பப் பயனை அடைவதேயாம்.
இவ்வுலக வாழ்க்கை துன்பமயமானது அதில்
கிடந்து உழலாது மெய்யடியார்கள் இறைவனோடு இரண்டறக்கலந்து
அவன் அருளைப்பெற்று வீடு பேறு பெற்றுச் சிறப்பதே
பேரின்பம் என்றோதப்பட்டது.அப்பேரின்ப நிலை எய்த வேண்டுமானால் துறவு மேற்கொள்ளவேண்டும்.அஃதாவது
சீவான்மா பரமான்வோடு ஒன்றுதலாம். இல்லறவாழ்வில்
ஆணும்பெண்ணும் கலந்துறைவது சிற்றின்பம் என்றனர்.
இல்லறம் – துறவறம்.:
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக