வெள்ளி, 11 ஜூலை, 2025

தமிழமுது –.71 . தமிழர் இயற்கை வழிபாடு. ஆன்மா, அழிவதில்லை….?

 

தமிழமுது –.71 . தமிழர் இயற்கை வழிபாடு.

ஆன்மா, அழிவதில்லை….?

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்

பென்ணினும் கற்புடையாள் பெற்றானும்உண்ணும் நீர்

கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்

சாவா உடம்பெய்தி னார்.” என்கிறது, (திரிகடுகம்.16.)

ஆன்ம தத்துவங்கள் -25.

நிலம், நீர், தீ, வளி, வான் என்னும் பூதங்கள் ஐந்து.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் புலன்கள் ஐந்து.

மெய்,வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகள் ஐந்து.

கை, கால், வாக்கு, குதம், குறி என்னும் கருவிகள் ஐந்து.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம், என்னும் கரணங்கள் நான்கு.

24ம். சடதத்துவங்கள், இதில் சீவன் குடி புகுகின்றான், புகவே தத்துவம் 25. இந்தச் சீவனுள் ஈசன் புகுந்து யாவும் இயக்கி அருளுகின்றான்.

சூரியன்:

ஆதவன் நாளும் ஒளிசெய்து வருவதுஆதி பகவன்’. எந்நாளும் நிலையாத் தொழில் செய்து வருவதைத் தெளிவாக்கி, உலக சோதியான சூரியன் பரஞ்சோதியின் நிலைமை தலைமைகளை நாளும் வெளிசெய்து யாண்டும்  ஒளி புரிந்து வருகிறான்.

பத்தினி:

பதிவிரதையான துரோபதை பெண்களின் மனநிலைகளைக் கூறிகிறாள்….

“ஐம்புலன் களும்போல் ஐவரும் பதிகள்

        ஆகவும் இன்னும்  வேறு ஒருவன்

எம்பெருங் கொழுநன் ஆவதற்கு உருகும்

        இறைவனே எனது பேர் இதயம்

அம்புவி தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும்

        ஆடவர் இலாமையின் அல்லால்

நம்புதற்கு உளதோ என்றனன் வசிட்டன்

        இல்லற மனைவியே அனையள்.” (வில்லிபாரதம்.)

சிறந்த அழகரான ஐந்துபேர் எனக்கு நாயகராய் அமைந்துள்ளனர் இருந்தும் மேலும் ஒருவன் மேல் என் உள்ளம் அவாவி ஓடுகின்றது. உத்தம பத்தினிகளுள் நானும் ஒருத்தி, எனது மனமே இவ்வாறு ஆனால் வேறு பெண்களை எவ்வாறு நம்புவது..? நம்ப வேண்டுமானால் ஒரே வழிதான் உள்ளது ; இந்த உலகத்தில் ஆடவர்கள் என்ற பிறப்பே இல்லாமல் மறைந்து போனால் அப்பொழுதுதான் மகளிரை முழுவதும் நம்பலாம் எனக் கண்ணனிடம்  அவள் பேசினாள்.

 எனக்கு ஐவர் பதிகளாயுள்ளனர் ஆறாவது ஒருவனையும் மனம் அவாவுகிறது ஆடவர் யாரும் இல்லாதபோதுதான் எல்லா மகளிரும் பதிவிரதைகளாவர் என வடமொழியிலும் துரோபதை மொழிவாள்.

ஆன்மா:

.………………………தொடரும் ------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக