சனி, 19 ஜூலை, 2025

தமிழமுது –.77 . தமிழர் இயற்கை வழிபாடு. காதல் – காமம் . அறநெறி வாழ்வியல்.

 

தமிழமுது –.77 . தமிழர் அறநெறி வாழ்வியல்.

காதல்காமம்

காதல் – அறவழி நிற்றல் :

 தொல்காப்பியர் காதல் களவொழுக்கமாகும் என்கிறார்.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் எனும் நூற்பாவில்

இன்பமும் பொருளும் அறமும் என்று சொல்லப்பெற்ற அன்போடு இணைந்த ஐந்து ஒழுக்கங்களைக் கூறும்போது, காமக்கூட்டம் என்பது தமிழ்மறையோர் தமிழகத்துக் கூறப்பெற்ற எட்டுவகை மணத்துள், இசைத் துறையைச் சார்ந்த யாழ்த்துணையோர் இயல்பே. ஆகும்.

 அதற்குரிய காரணமாவது:

“ஒன்றே வேறே என்றிரு பால்வயின்

ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

மிக்கோன் ஆயினும் கடிவரை யின்றே.” என்றது

ஒன்றுபடுத்தும் ஊழ்நிலையானும் வேறுபடுத்தும் ஊழ்நிலையானும் அமையும் வாழ்க்கையில் ஒன்றுதலைச் செய்யும் உயர்ந்த ஊழின் ஆணையால், ஒத்த தலைவனும் தலைவியும் காண்பர். தலைவன்  மிக்கோன் ஆனாலும் நீக்கப்படல் இல்லை என்பதாம்.

காதல் வயப்பட்ட இருவரும் ஊரும் உறவும் அறியாவண்ணம் தனிமையில் மகிழ்ந்திருத்தல் நிகழ்வது இயல்பே. எனினும்  இந்நிலை இரண்டு திங்கள் அளவே நீடிக்கும் அக்கால எல்லைக்குள் உடன்போக்கு எனப்படும்  வீட்டை விட்டு வெளியேறி மணம்புரிந்து கொள்வர். இந்நிகழ்வு அறவழிப்பாட்ட தாகும் என்று சான்றோர் இலக்கணை இலக்கியங்கள் கூறுகின்றன.

சான்றாக  ஒன்றைக் காண்போம்.

“ இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்

அறம் தலைப்பிரியா ஆறும் மற்றதுவே. –கலித்தொகை. 9.

 தாயே….! விரும்பிய காதலனோடு சென்ற கற்பிற் சிறந்தவளை எண்ணிக் கலக்கம் அடையாதே…! சிறந்தவைனைத் தேர்ந்து அவன் பின்னே சென்றாள் ; அறங்களுள் சிறந்த இல்லறத்திற்குரிய வழியும் அதுவே என்று  உடன்போக்குச் சென்ற இருவரையும் வழியில் கண்ட பெருமக்கள் தலைவியின் தாயிடத்துக் கூறுவதாக இப்படல் அமைந்துள்ளதை நோக்குக.

காதல்  அறவழிப்பட்டுச் சிறப்புற்றதைத் தமிழ் மக்கள் போற்றியுள்ளனர் என்பது தெளிவாகின்றதே! மேலும் இக்காதல்  மணம் புரிந்துகொண்டு இல்லற வாழ்விற்குத் தகுதியுடையதாகையால்  இக்களவு மணம் கற்பில் நிறைவடைகிறது  என்பதையும் அறிதல் நன்று

காமமும் அறவழி நிற்றல்:

Pl. donate:

R.KUMARAN,Thanjavur.

Account No: 0914101167707

IFSC CODE : CNRB 0001854

MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக