வியாழன், 11 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி - 13 - 14

அகநானூறு – அரிய செய்தி - 13                  

                                                   உணவு-மீன்
உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு
அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
                                                     குடவாயிற் கீரத்தனார், அகநா.60 : 4-6

உப்பு விற்றுக் கொண்ட நெல்லினாற் சமைத்த மூரலாகிய வெண்சோற்றை அயிலை மீனையிட்டாக்கிய அழகிய புளிக் கறியினைச் சொரிந்து கொழுமீன் கருவாட்டினுடன் இளைய மகள் இடும் இடமாகிய
இறால், அயிலை, கொழுமீன் – மீன்வகை. மூரல் சோறு – முறுவல் போலும் சோறு. குடந்தை – குடவாயிற் என்பதன் மரூஉ.
அகநானூறு – அரிய செய்தி - 14                                                                                                                  புதைத்த செல்வம்
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடுதரு நிதியினும் செறிய
அருங்கடிப் படுக்குவள் அறனில்யாயே
                                               குடவாயிற் கீரத்தனார், அகநா.60 : 13-15
வெற்றிபொருந்திய சோழர் குடவாயிற்கண் போற்றி வைத்த, பகைவர் நாடு திறையாகக் கொடுத்த நிதியைக் காட்டிலும் மிகவும் அரிய காவற்படுத்திவிடுவாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக