வெள்ளி, 19 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -61 - 65

அகநானூறு – அரிய செய்தி -61
                                              மூங்கில்
ஒலிகழை நிவந்த நெல்லுடை நெடுவெதிர்
கலிகொள் மள்ளர் வில்விசையின் உடைய
பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் ........
     பாலை பாடிய பெருங்கடுங்கோ, அகநா. 185:6-9
வாடுதலையும் ஒலித்தலையும் உடைய தண்டினையும் மேல் நோக்கி எழுந்த நெற்கதிர்களையும் உடைய நீண்ட மூங்கிலானது, ஆரவாரம் மிக்க வீரர்கள் வளைத்துவிட்ட வில் ஒலியுடன் தெறிக்குமாறு போல வெப்பத்தைப் பொறுக்கமாட்டாது ஒலியுடன் வெடித்துத் தெறிக்கும்.
அகநானூறு – அரிய செய்தி -62
                                       பாதிரிமலர்
இது வேனிற் காலத்து மலர்வது. வளைந்த வடிவினைக் கொண்ட இம்மலரிலுள்ள துய் மயிரென்றும் வழங்கும், இம்மலரின் துய் பெண்களின் வயிற்றிடத்து உள்ள மயிர் ஒழுங்கிற்கு உவமையாகக் கூறப்படுதல் மரபு. அகநா. 191 – மேலும் காண்க - ” வேனிற் பாதிரிக் கூன்மலர் அன்ன மயிரேர்பு ஒழுகிய அம்கலிழ் மாமைகுறுந்.147:1-2)
அகநானூறு – அரிய செய்தி -63
                                                புளிக்கறி
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி
ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு
தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து
விடியல் வைகறை இடூஉம் …..
             பரணர், அகநா. 196: 4 – 7
பாணர்கள் கள்ளுண்டு களித்து வேட்டைக்குச் செல்லாமல் மறந்து உறங்கினர், உறங்கிய கணவன்மார்க்கு அவரவர் மனைவியராகிய பாண் மகளிர், இருள் புலரும் விடியற்காலத்தே, ஆம்பலது அகன்ற இலையில் சுடுகின்ற சோற்றுத் திரளோடு பிரம்பின் புளிப்பும் இனிப்பும்கலந்த திரட்சியான பழத்தினைக் கொண்டு ஆக்கிய புளியங் கறியை இட்டு உண்பிப்பர். ( பாட்டிபாண்மகளிர்பிரம்பின் திரள் கனி பிரப்பங்கொடி ;   இக்கொடி ஒன்றோடொன்று பிணங்குதலை உடையது, இதன் கனி புறத்தே வரிகளைக் கொண்டது, இதனை : அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி, குறுந். 19;1 என்று கூறும். கள் விற்கும் அங்காடியில் கொடி நடுதல். 372-374, பாணர்கள் மீன் பிடித் தொழிலர் 269.- . காஞ்சி.)
.
அகநானூறு – அரிய செய்தி -64
                                                   விருத்தாசலம்
தலைவன் அரிய பாலை வழியைக் கடந்து பொருள் தேடமறம்மிகு தானை கண்ணன் எழினி, தேம்முது குன்றம் இறந்தனர் ஆயினும்- மாமூலனார்,அகநா. 197: 7,8. – தேன் மணக்கும் முதுகுன்றம் இந்நாள் விருத்தாசலம்  என்பர்ஆய்க.
அகநானூறு – அரிய செய்தி -65
                                                     -களவுப்புணர்ச்சி
கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது
நயந்து நாம் விட்ட நல்மொழி நம்பி
அரைநாள் யமத்து விழுமழை கரந்து
கார்விரை கமழும் கூந்தல் தூவினை
நுண்நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின்
இளமழை சூழ்ந்த மடமயில் போல
வண்டுவழிப் படர தண்மலர் வேய்ந்து
வில்வகுப் புற்ற நல்வாங்கு குடைச்சூல்
அம்சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்
ஆன்றகற்பின் சான்ற பெரியள்
                                                  பரணர், அகநா 198: 2-12
நம்முள் மறைக்க இயலாத காம்ம்- நம் நல்மொழி நம்பி, தலைவி பரல் இடப்பட்ட சிலம்பு  ஒலிக்க விடாதுகுளிர்ந்த மலர் சூடிமணங்கமழும் கூந்தல்அழகிய நுண்ணிய நூலால் ஆன உடை மயில்போல் நடந்து வந்து ஊர் உறங்கும் வேளை- தழுவி மழ்ந்து போயினள்கற்பிற் சிறந்தாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக