புதன், 24 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -96 - 100

அகநானூறு – அரிய செய்தி -96  
புளிச் சோறு – 1- 5
                         காதம் =மரம் வி.ஐ (ஒளவையார் பாடல்- உருவகம்)
  ‘ கற்பின் மிகுதி தோன்ற முல்லை சூடுதல் இயல்பு ( சிறுபாண்.) என்னும் நச்சினார்க்கினியர் கூற்றால், கற்புக்கு அறிகுறியாக மகளிர் முல்லை மலரைச் சூடுதலும் மரபாகக் கொள்ளப்படுகிறது.
அகநானூறு – அரிய செய்தி -97  
                                       ஆரியர்
……………. ஆரியர்
பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போல
                                       -பரணர், அகநா. 276 9, 10
 ஆரியர் பழக்கி வைத்த பெண்யானை தானே கானகம் சென்று பழகிப் பற்றிக்கொண்டு வந்து தருகின்ற களிற்றியானையை அவ்வாரியர்
பிடித்துச் சிறை வைத்தாற் போன்று….
அகநானூறு – அரிய செய்தி -98  
                                                      ஆரியர்
மாரியம்பின் மழைத்தோற் சோழர்
வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை
ஆரியர் படையின் உடைகவென்
நேரிறைமுன்கை வீங்கிய வளையே
                    பாவைக் கொட்டிலார், அகநா.336 :20 - 23
வெற்றி பொருந்திய வேலினையும் மழைபோன்ற அம்பினையும் மேகம் போன்ற தோற்கிடுகினையுமுடைய சோழரது விற்படை நெருங்கிய அரணையுடைய வல்லத்துப் புறத்தேயுள்ள காவற் காட்டின்கண் வந்தடைந்த  ஆரியரது படை போல எனது முன்கையில் திரண்ட வளையல்கள் சிதைந்து ஒழிவனவாக.( சோணாட்டின் கண்ணதாகிய வல்லத்தின் புறத்தே ஒருகால் ஆரியர் படையெடுத்து வந்து தோற்றோடினர் என்னும் வரலாறு பேசப்படுகின்றது.)
அகநானூறு – அரிய செய்தி -99  
                                           பார்ப்பான் தூது , வெள்ளிய ஓலை
தூதுஒய் பார்ப்பான் மடிவெள் ஓலைப்
படயுடைக் கையர் வருதொடர் நோக்கி
உண்ணா மருங்குல் இன்னோன் கையது
பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
திறனில் சிதாஅர் வறுமை நோக்கி
செங்கோல் அம்பினர் கைநொடியாப் பெயர
           பாலை பாடிய பெருங்கடுங்கோ, அகநா.337: 7 – 13
பாலைவழி- தூது செல்லும் பார்ப்பான் – வெண்ணிற ஓலை – பொன்னாகவும் இருக்கலாம்- கொன்று போட்டனர்- வறுமை – வாடிய உடல்- கிழிந்த ஆடை -  ஆண்நரி – அவன் குருதியுடன் – குடலைக் கிழித்து உண்ணும்.
அகநானூறு – அரிய செய்தி -100 
                                       -நறுமணச் சாந்து, வடவர் தந்த....
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் ---
                    -நக்கீரர், அகநா. 340: 16 – 18

  வடவர் – வெண்ணிற வட்டக் கல் –குடமலை (பொதியமலை) சந்தனம்-பிற மணப் பொருள் – அரைத்தல். (பவத்திரி – திரையன் ஊர் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக