திங்கள், 1 ஜூன், 2015

மனவளக் கலை --- யோகம்

  மனவளக் கலை --- யோகம்
                            தொல்தமிழர்தம் அறிவாற்றலில் விளைந்த அற்புதக் கலை. இக்கலை மிகவும் தொன்மையானது. சிவபெருமானை முதன்மை குருவாகக்கொண்டு  வளர்த்தெடுக்கப்பட்டது. உடற்கூறுகளை உய்த்துணர்ந்து இன்றைய அறிவியல் வியக்கும் வண்ணம் வாழ்வியலை வளப்படுத்தும் இக்கலை – சிந்துவெளித் தமிழர்களிடம் சிறந்தோங்கி இருந்ததற்கான அகழாய்வுச் சான்றுகள் கிடைத்துள்ளன. இஃது ஆரியர் வருகைக்கு முன்பே தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருந்தது
 கோவிந்த் ரவத் எழுதியுள்ள யோகா நலவாழ்வு மந்திரம் என்ற நூலில் – ------      
( Govind Rawat – Yoga –The Health Mantra )
       The History of yoga may go back anywhere from five to eight thousand years. depending on the perspective of the historians. It evolved wholly in the land of India and while it is supposed by some scholars that yogic practices were originally the domain of the indigenous- non Aryan (and Pre- Vedic) peoples. It was first clearly expounded in the great Vedic shastras (Religious texts).—p.30
                                  வேத காலத்திற்கு முன்பே யோகக் கலை செழித்திருந்தது என்பதற்கு ஓர் அரிய முத்திரை கிடைத்துள்ளது அம்முத்திரையில் யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஓர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
Pre-Vedic findings are taken by some commentators to show that “Yoga” existed in some form well before the establishment of Aryan culture in the north Indian subcontinent.
A triangular amulet seal uncovered at the Mohenjo – daro archeological excavation site depicts a male – seated on a low platform in a cross – legged position whth arms outstreched.-ibid.
                                     இக்கலை கி.மு. 2500 வரை எம்மொழியிலும் எழுத்து வடிவம் பெறவில்லை. பின்னாளில் உபநிஷத்துகளில் இக்கலை குறித்த தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளன. கி.மு ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய (?) பகவத் கீதையில் யோகக் கலைத் தத்துவங்கள் கண்ணபெருமானுக்கும் அர்ச்சுனனுக்கும் இடையே நடக்கும் உரையாடலாக அமைந்துள்ளன. கி.மு. மூன்றாம்  நூற்றாண்டில் பதஞ்சலி முனிவர் எழுதிய யோக சூத்திரங்களில் யோகக் கலை முழு விளக்கம் பெறுவதைக் காணமுடிகிறது. (ப.31) இவர் உருவாக்கிய யோக சூத்திரங்கள் எட்டு – இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்யாகாரம் தாரணை தியானம் சமாதி என்பன. இவை மனக் கட்டுப்பாடு- ஒழுக்கம்- உடற்பயிற்சி –உணவு- மூச்சுப்பயிற்சி- ஐம்புலன் அடக்கல்- மனத்தை ஒருமுகப்படுத்தல்- அதுவாக ஆதல் ஆகியவற்றைக் குறிக்கும்.
                      அஃதாவது சீவன் பரமான்மாவை மருவி மகிழ்கிற புனித நிலையே யோகம்.
                       யோகம் தியானம் சமாதி என்பன மகான்களுடைய மேலான நிலைகளைக் குறித்து வருகின்றன என்பர் சான்றோர்.
யோகப் பயிற்சி
  “ யோகம் பயில் – உடல் நலம் பெறும் “
                               கி.து. வாண்டையார்- இன்பவாழ்வு –ப.76
                              இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று ஒவ்வொரு நாளும் விடியலை நோக்கும் மன வலிமை – உடல் வலிமை  - யோகப் பயிற்சி நல்கும்.
“ கதிரவன் உதிக்கும் முன் துயில் எழுந்து காலைக் கடன்களை முடித்து தேக நலனுக்காக அப்பியாசம் துவங்கவும்.
25 நிமிடங்கள் ஆசனப் பயிற்சியோடு நாளைத் துவக்குங்கள் “  (மேலது)
                                என்பன ஐயா அவர்களின் அறிவுரை காலையில் துயில் எழலும் காலைக் கடன்களை முடித்தலும் ஐந்தில் விளைய வேண்டிய நற்பழக்கங்கள். இன்றைய இளைஞர்களிடம் இப்பழக்கங்கள் உள்ளனவா ? படிப்பு பட்டம் பதவி இவற்றைப் பெறவே பிறந்திருப்பதுபோல் ஒரு பிரமை. உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். எது எப்படியோ இக்குறைகள் இன்றோடு ஒழியட்டும் ; நாளைய பொழுது நல்ல பொழுதாக விடியட்டும். ஐயா அவர்கள் மேற்கொண்டுள்ள அறப்பணி நீர் நிலைகள் நிறையப் பொழியும் கோடை மழை. இன்னார் இனியார் என்றில்லாது எல்லோரும் நலம் பெற அன்றாடம் பொழியும் அருள் மழை; செவி மடுப்போர் சிறப்புறுவர்.
                           “ வயது வரம்பு கிடையாது. ஆசனம் பயில; பாமரன் முதல் பண்டிதன் ஈறாக – பாலகனும் முதியோரும் அவரவர் உடல்வாகிற்கு ஏற்றாற்போலச் சுகாசனம் பயின்றால் வியாதி உடலைத் தேடி வர யோசிக்கும் “( மேலது)
                             பன்னெடுங்காலமாகச் சித்தர்கள் போற்றி வளர்த்த நெறி ஐயா அவர்கள் வழியாக இன்று நிலைபேறு பெற்றுத் திகழ்கிறது. சித்தர்களின் சித்தாந்தத்தை ஆராய்ந்த செ. கணேசலிங்கன் --
                          “ சித்தர்கள் நோயின்றி மாறா இளமையுடன் வாழ யோகப் பயிற்சியை வலியுறுத்துவர். அதை மீறி நோய் ஏற்படின் தீர்ப்பதற்குச் சித்த வைத்தியத்தை விருத்தி செய்தனர் .” என்பார்.
                       பண்டைத் தமிழர் இயற்கையோடு இயைந்த வாழ்வை வற்புறுத்தினர். அறிவியல் யுகம் என்று வருணிக்கப்படும்  இந்தக் காலக் கட்டத்திலும் கூட இயற்கையை எதிர்த்து வாழ்தலோ வெல்லுதலோ இயலாது. பெருங் காற்றையும் பேய் மழையையும் பனிப் புயலையும் நில நடுக்கத்தையும் கடல் கொந்தளிப்பையும் செஞ்சுடர் தீக்கதிரையும் இடி மின்னல் ஆகியவற்றின் ஆற்றல்களையும்  அவை தாக்கும் காலத்தையும் அறியலாம் – ஆயின் தடுக்கும் ஆற்றல் உளதோ ?
                           “ இயற்கையால் சராசரி நூறாண்டுகள் வாழப் படைக்கப்பட்டுள்ள மானிட வாழ்க்கையின் பயணத்தைத் தவறான குறைபாடுள்ள வாழ்க்கை முறைகளினால் மனநலம் உடல் நலம் குன்றி வாழ்க்கைப் பயணத்தைக் குறைத்துக்கொள்கிறான்.
                     எல்லா வசதிகளையும் பெற்றுள்ள மனிதன் தன் மனத்தால் அடையும் அமைதியை இழந்து இயற்கையுடன் மாறுபட்டு வாழ்வதனால் இயல்பான மன அமைதியை இழந்து பலவகை உணர்ச்சிப் போராட்டங்களுக்கு ஆளாகிப் பல நோய்களுக்கு இடம் கொடுக்கிறான். மிகுந்த ஆற்றல் வாய்ந்த மனிதனின் “ மனம்”  மூளையின் ஒரு பண்புக்கூறாக உணரப்பட்டாலும்  மூளை இதயம் மற்றும் உடலின் அனைத்து அக-புற உறுப்புகளையும் இயங்க வைப்பது மனம் தான்.” என்கிறார் இதய நோய் நிபுணர் டாக்டர் வி. சொக்கலிங்கம்.
                        மனத்தை அறிவியல் கண்கொண்டு ஆராய்ந்தாயிற்று- உளவியல் கண்கொண்டு உணர்ந்தாயிற்று ; இதனால் முன்னோர் மொழிந்தவை யாவும் முற்றிலும் சரியே என்பது விடையாயிற்று.
                   நிரய  வாழ்க்கைநில்லாது ஒழிய ; துறக்க வாழ்க்கை சிறக்க – மனமே வாழும் கலை பயில். கழிந்ததற்கு இரங்கிக் காலத்தை வீணாக்காதே. ஐயா அவர்கள் கூறுவதை மனத்தில் கொள்க. உடல் வளமும் உள்ளத் தெளிவும் இன்றே பெறுக ! வாழ்க்கைப் பயணம் இனிதே அமையும் .
                                  ………………………………………தொடரும்…………

                              

3 கருத்துகள்:

  1. பகவத்கீதை கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது பற்றிய விளக்கம்
    www.philosophyofkuralta.blogspot.in

    பதிலளிநீக்கு
  2. அன்புடையீர் - அது ஒரு மேற்கோள் தங்கள் கருத்து எனக்கும் உடன்பாடே அதனால்தான் ஆண்டு ஒரு வினாக்குறி இட்டேன்.

    பதிலளிநீக்கு