சான்றோர் வாய் (மை)
மொழி : 31. பெருஞ்சித்திரனார்.
முதுமையும் வறுமையும்
“பால் இல் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள் இல் வறுங்கலம் திறந்து அழக்கண்டு
மறப்புலி உரைத்தும் மதியம் காட்டியும்
நொந்தனளாகி………………………….” புறநானூறு, 160: 15 – 19.
இளம் புதல்வன்
பால் இல்லாத வற்றிய முலையைச் சுவைத்துப் பால் பெறானாய்க் கூழையும் சோற்றையும் வேண்டி
உள்ளே ஒன்றுமில்லாத வறிய சோற்றோடு கலத்தைத் திறந்து பார்த்து, அதில் உணவைக் காணாது வருந்தி அழுகின்றான் ; அவன்
அழுகையை நிறுத்த, காட்டில் உறையும் மறப்புலி வருகின்றது என்று சொல்லி அச்சுறுத்தியும் நிலவைக் காட்டியும் அவற்றால் தணிக்க இயலாது வருந்தினாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக