சான்றோர் வாய் (மை)
மொழி : 39. நல்லந்துவனார்.
கனவு நனவாகுமே.
”கனவில் வந்த கானல்அம் சேர்ப்பன்
நனவில் வருதலும் உண்டுஎன
அனைவரை நின்றது என்அரும்பெறல் உயிரே.”
கலித்தொகை: 128, 24 – 26.
தோழி…! யான் காணும்படி என்
கனவிலே வந்த தலைவன், நனவில் வந்து கூடுதலும் உண்டு என்று கருதி அவன் வரவை எதிர்நோக்கி
என் அரிய உயிரும் என்னைவிட்டு நீங்காது நின்றது. –தலைவி கூற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக