சான்றோர் வாய் (மை) மொழி
: 41.பாலைபாடிய பெருங்கடுங்கோ.
இளவேனில் கால இன்பம்.
”நிலன் நாவில் திரிதரூஉம் நீள்மாடக் கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது.”
–கலித்தொகை:35, 17,18.
தோழி…!
நில உலகில் உள்ளார் நாவிலே தவழும் தமிழால் நீண்ட மாடங்களை உடைய மதுரை நகரில் வாழும்
அறிவினை உடைய சான்றோர் நாவில் பிறந்த கவிதைகளின் புதுமையை நுகரும் இளவேனில் காலமல்லவோ
இது.” என்றாள் தலைவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக