சான்றோர் வாய் (மை) மொழி :
115. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர்
– சங்க காலம்.
எப்பொருள்
எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்பது அறிவு
. குறள். 355.
தமிழ், ஓர் இயற்கை மொழி மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இடையறாது தொடர்ந்து
வழக்கில் இருந்துவரும் மொழியாகும். உலகின் மிகத் தொன்மையான மொழிகளுள் முதலிடம் வகிக்கும்
சிறப்பையும் கொண்டுள்ளது என்பது உலகம் ஒப்புக்கொண்ட உண்மையாகும்.
மேலும் உலக
ம் போற்றும் உன்னத இலக்கண இலக்கியங்களைக் கொண்டுள்ள மொழியாகும். மேற்சுட்டியுள்ள சான்றுகளின் வழித்
தமிழ் ஓர் அறிவியல் மொழி என்பதும் உறுதியாகின்றதன்றோ.!
தமிழ் வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் சிலர் “ சங்க காலம்
பொற்காலம் என்றோ, பொதுவுடைமைச் சமுதாயம் என்றோ கூறிவிட முடியாது “ என்று கூறுகின்றனர்.
“ மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் போன்ற
நூல்கள் செல்வர்கள் நிலையைச் சிறப்பாக எடுத்தியம்ப…..
பெரும்பாணாற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை, இன்னபிறவும் பழந்தமிழகத்தின் வறுமை நிலையை எடுத்துக்காட்டுகின்றன
என்பர்.
எனினும் இலக்கண இலக்கியங்கள் வாழ்வியல் நெறிகளை
அறிவியல் நோக்கில் ஆய்ந்து எடுத்தோதும் சிறப்பினைப் பெற்றுள்ளன என்பதே உண்மை.
“இனாத அம்ம இவ்வுலகம் ; இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே
என்று இவ்வுகம் துன்பம் நிறைந்ததே
சில
சான்றுகள் :
இவ்வுலகத்து
இயற்கை உணர்ந்தோர் இனிய காண்பதற்கேற்ற நல்ல செயல்களை அறிந்து செய்வாராக என்று புறநானூற்று
194 ஆம் பாடல் கூறுகிறது… மேலும் காண்க :
யாக்கை நிலையாமை – புறநானூறு : 365.
செல்வம் நிலையாமை - “ “ “ –
357, 360, 363.
விருந்து பேணல் – நற்றிணை – 41, 81, 135, 258.
பகிர்ந்து கொடுத்தல் – நற்றிணை – 336.
கற்பு நிலை -
“ “ “ –
397.
மன்னித்தல் -
“ “ “ – 355.
இறைக்கொள்கை – புறநானூறு : 196.
இல்லற வாழ்வில்
ஒருவரைவிட்டு ஒருவர் பிரிதலாகிய சந்நியாசம் கோடல் தமிழர் நெறியன்று. இணைந்த இருவரும்
இல்லறத்தில் இருந்தபடியே சிறப்படைவதுதான் தமிழர் நெறி. பிறன்மனை விழைவதோ, பரத்தையை விழைதலோ கூடாது.
…………………. –தொடரும்………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக