சான்றோர் வாய் (மை) மொழி : 131. அறிவியல்
சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்- திருவள்ளுவர்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
குறள். 355.
அறிவியல்
சிந்தனைகள் :
தமிழை
எங்குநோக்கினும் எப்படி நோக்கினும் அன்றுமுதல் இன்றுவரை – அடிமுதல் முடிவரை – கலையாக, கவிதையாக,
வாழ்வியலாக அறிவியல் சிந்தனைகள் செறிந்து விளைந்து நிறைந்துள்ளதைக் காணலாம்..
திருக்குறளும் அப்படியே,
தொட்ட இடமெல்லாம்
திருவள்ளுவரின் அறிவியல் சிந்தனைத் தேன் துளிகள் சிதறிக்கிடக்கின்றன. சொல்லோடு விளையாடி, பொருளோடு போராடி , காமத்தில்
களிநடனமாடி முப்பாலெனத்
தமிழ்ப்பாலாகிய தாய்ப்பால் நல்கும் தமிழன்னையே, வரலாற்றால் தொடமுடியாத
தொலைவில் நின்று அருள்புரியும் அன்னையே. தொல்காப்பியரையும் திருவள்ளுவரையும்
ஈன்றபொழுது மகிழ்ந்தாயோ… சான்றோன் எனக் கேட்டபொழுது பெரிது உவந்தனையோ..!
அறிவியல் என்றால் என்ன…?
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு . குறள்.
355.
எப்பொருள் எவ்வகைமைத்தாயினும்
;எத்தன்மைத்தாயினும் அஃதாவது உயிருள்ளவையாயினும் உயிரற்றவையாயினும் அப்பொருளின்
இருப்பையும் இயல்பையும் இயக்கத்தையும்
கண்டறிவதே அறிவு என்கிறார். இஃது அறிவியலின்
அரிச்சுவடி என்க.
“ Science – a branch of knowledge requiring systematic study and
method – especially one of those dealing with substances ……..” – animal and
vegetable life and natural laws……..”
பொருள் என்ற
சொல்லுக்குத் தமிழ் அகரமுதலி – 23 பொருள் விளக்கங்களைக் குறிப்பிட்டுள்ளது.
Valluvar does not believe in the mere acceptance of things only on
the basis of tradition or sanctity. He wants the core of ultimate truth to be
arrived at by going right behind appearances with vigorous use of reason.”
..(Tr.) Dr.S.M.Diaz.
மேற் சுட்டியவாறு திருவள்ளுவர்
மிகத்தெளிவாக அறிவியலை வரையறுத்துள்ளார் என்பதை
எசு.எம். டையசு வள்ளுவரின் அறிவியல் சிந்தனையைப்
போற்றிப் பாராட்டுகின்றார்.
மனநலம்
மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
--குறள். 457.
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்-
என்ற ஓர்
உளவியல் ஆய்வுக் கோட்பாட்டை உலகிற்கு வழங்குகிறார் திருவள்ளுவர். மருத்துவ அறிவியல்
துறையில் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டுக்கு(1856 – 1939) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உளவியல் பகுப்பாய்வின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்
திருவள்ளுவர் .
மேற்சுட்டியுள்ள
குறட்பாவை,
அறிவியல் உலகம் திருவள்ளுவரின் அரிய கண்டுபிடிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மனநலம் என்பது
மனத்துக்கண் மாசின்றி இருத்தலே. அஃதாவது..
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. --குறள். 34.
ஒருவன் தன்
மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது, மற்றப் பூச்சும் ஆடையும்
அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.
To be quite free from mental blots is all
that’s righteousness
And all the rest of acts without such
freedom are but fuss.
(Tr.) K.M.Balasubramaniam.
மனம் குறித்து
ஆராய்ந்த திருவள்ளுவர், “ ஒருவன் தன் மனத்தின்கண் குற்றம் இல்லாதவனாக
இருத்தல் வேண்டும் ; அறம் எனப்படுவது அஃதே ; மனத்தூய்மை இல்லாத மற்றவையெல்லாம் வெறும் ஆரவாரத் தன்மையுடையனவே “ என்றார்.
மனத்துக்கண்
மாசிலனாதல் இயலுமா..? இது ஒரு மிகப்பெரிய வினா. மனம் எதையாவது ஒன்றைப் பற்றி நிற்பது இயல்புதானே . தெளிவான மனத்தைப் பெறுவது எப்படி..? அதற்கான விடையைத் திருவள்ளுவரே கூறுகின்றார்.
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (35)
பொறாமை,
ஆசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய
நான்கையும் நீக்கிவிட்டுச் செய்கின்ற எல்லாக் காரியங்களும் அறங்களேயாகும் என்பார்.
மனம் மாசு அடைய மேற்சுட்டிய நான்கும் காரணமாதலின் இவற்றை நீக்கி வாழ
முற்படுவோமானால் உடலும் உள்ளமும் வளமாகி நெடிது உயிர் வாழ்தல் எளிதாகும் என்பதறிக.
பொறாமை முதலிய நான்கனுள் ஏதேனும் ஒன்றாவது உள்ளத்தைப் பற்றி உளைச்சல்
தருமானால் நோய்வாய்ப்பட்டு நலிதல் உறுதி என்பது வள்ளுவர் கூற்றாம் . மனநோயும் மருத்துவம்.
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். (278)
மனத்துள் மாசு நிறைந்திருக்க, தவ ஒழுக்கத்தால் மாண்பு பெற்றவரைப் போல் நீரில் மூழ்கி ; மறைந்நொழுகும் வஞ்சனை உடைய மாந்தர் பலர் உலகில் உள்ளனர். பொன்னாசை, பொருளாசை, பெண்ணாசைகொண்டு
முற்றும் துறந்தவர் என மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் கயவர்களைச் சுட்டிக் கருத்துரைத்தார்.
மேலும் சிற்றினஞ்சேராமை (46) இடுக்கணழியாமை (63) அதிகாரங்களில் மனநலம் முறித்து மிக
விரிவாகப் பேசுகின்றார்.
உளவியல்
அறிவியல் வழி மக்கட்சமுதாயத்தை ஆராய்ந்த திருவள்ளுவர் தனிமனித ஒழுக்கம் , அதுசார்ந்த வாழ்வியல் ஒழுக்கம்,
உலகியல் ஒழுக்கம் ஆகியவற்றை நடத்தை விதிகளாக வகுத்துக் கூறுகின்றார். திருக்குறளின் மனநல ஆய்வு,
உலகமக்களின் உயரிய வாழ்க்கைக்குத் திருவள்ளுவர் வழங்கிய அரிய அறிவியல்
அறிவுரைக் களஞ்சியம் எனலாம்.
கொல்லும் சினம்
Anger
kills
தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே
கொல்லும் சினம். --குறள்.305.
If thou wouldst fain protect thyself, do guard
against thy spleen
If thou guardest not, thy own anger will destroy
thee clean.
( Tr.) K.M.Balasubramaniam.
London:
Scientists have confirmed that hot-headed people with outbursts of anger are
more prone to heart attacks, strokes and other cardiovascular problems in the
two hours immediately afterwards. Five episodes of anger a day would result in around 158 extra
heart attacks per 10,000 people with a low cardiovascular risk per year, increasing to about 657 extra
heart attacks per 10,000 among those
with a high cardiovascular risk.
The Harvard School of
Public Health Researchers .
“ This research found that people’s
risk of heart attack and stroke increased for a short time after they lost
their temper. It’s not clear what causes this effect. It may be linked to the
physiological changes that anger causes to our bodies, but more research is
needed to explore the biology behind this.”
–Times
of India : 5-3-14
”நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. ----குறள்.
304.
மனமகிழ்ச்சியையும்
அதனல் பெறுகின்ற இன்பத்தினையும் அழிக்கின்ற சினத்தைவிடப் பகைவர் வேறு உளரோ..? சினத்தினால்
மனிதன் தன் வாழ்க்கையில் வேண்டி விரும்புகின்ற அரிய பெரிய வரத்தை சினம் சிதைத்துவிடுகிறது
என்பதை உணர்த்தும் வாழ்வியல் அறிவியலை உய்த்துணர்க.
சித்தர்கள்..…
திருவள்ளுவர் ……. தொடரும்…………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக