சான்றோர் வாய் (மை) மொழி : 129. அறிவியல்
சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்- திருவள்ளுவர்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
குறள். 355.
மெய்ப்பொருள் அறிஞர் :
“ மந்திரம் என்பது நினைப்பவனைக்
காப்பது என்னும் பொருளது. நினைப்பவன் எவ்வளவு உறுதியாக எண்ணுகிறானோ அவ்வளவுக்கவ்வளவு எளிதில் எண்ணிய எண்ணங்களை ஈடேற்றிக்
கொள்ள அவனால் இயலும் என்ற உண்மையை அடிநிலையாகக்கொண்டது. இக்கொள்கையை வள்ளுவனாரும் வினைத்திட்பம்
அதிகாரத்தில் ..
“ எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின் .
என்ற குறட்பாவால், நினைப்பவன் உறுதியாக ஒன்றை நினைத்தால் நினைத்ததை நினைத்த
வண்ணம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிறார். இத்தகைய உறுதியான எண்ணத்தையே வடநூலார் தியானம் என்பர். வள்ளுவர் கூறிய ‘இறைவனடி சேராதார்’ என்ற
பகுதிக்குப் பரிமேலழகர், சேர்தல் – இடைவிடாது நினைத்தல் எனக் குறிப்புத் தருவார். இது
இடைவிடாத தியானத்தைக் குறிப்பது என்பதில் ஐயமில்லை.
தொல்காப்பியர்
வழிவந்த திருவள்ளுவர் ”அறிவியல் முறையில் மெய்ப்பொருள்களை அணுகுமுறைக்கு அடிகோலியது சாருவாகம், இக்கருத்தையே வள்ளுப் பெருமானும்
இன்பத்துப்பாலில் ஏனையபாடல்களில் சிலவிடத்தும் குறித்தனராதல் வேண்டும். “
முப்பால் :
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல
நீர பிற. – அறத்துப்பால்.
செய்க
பொருளை செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனின் கூரிய தில். – பொருட்பால்.
மலருனும்
மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி
தலைப்படு வார் . – காமத்துப்பால்.
அறம்,
பொருள், இன்பம், எனும் முப்பால் திருக்குறளின் சிறப்பினைப் புலப்படுத்தும்.
…சித்தர்கள்..…
திருவள்ளுவர் ……. தொடரும்…………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக