சான்றோர் வாய் (மை) மொழி : 136. அறிவியல்
சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்-மருத்துவம்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
குறள். 355.
சித்தர் மருத்துவம் - சிறப்பியல்புகள்
“சித்தர்கள் வளர்த்த மற்றொரு அற்புதமான கலை சித்த
மருத்துவமாகும்.
இரசம்
உலோகம், உப்பு முதலிய தாதுப் பொருள்கள், செடி,கொடி, முதலிய தாவர வகைகள், நீரிலும் நிலத்திலும்
வாழும் உயிரினங்கள் ஆகிய எல்லாவற்றையும் மிகப் பழங்காலத்தே நுட்பமாகச் சித்தர்கள் அறிந்திருந்தமை,
இன்றைய அறிவியல் ஆராய்ச்சிக்கு விடுக்கப்பட்ட அறைகூவலாகும். ஒவ்வொரு பொருளின் தனி இயல்பையும் அப்பொருள் பிற
பொருளுடன் கலப்பதால் ஏற்படும் விளைவையும், கலக்கும் முறையையும் ; இயற்கையாகக் கிடைக்கும்
பொருள்கள் கிடைக்காதபோது, அவற்றை வைப்புச் சரக்காக உருவாக்குவதுபற்றியும் தாது, தாவர,
சீவ வர்க்கங்களையும் உலோக பாடாணங்களையும் பற்பம், செந்தூரம், இளகம் மணப்பாகு, கருக்கு,
குடிநீர் முதலிய மருந்து களாகச் செய்யும் முறைபற்றியும் மிக நுட்பமாகவும் விரிவாகவும்
சித்த மருத்துவம் விளக்குகிறது. மருந்துக்கு வேண்டிய பொருள்கள் எந்தெந்தக் காலங்களில்
எங்கெங்கே கிடைக்கும் என்பதைப் பற்றியும் மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
காலாங்கிநாதர் ஐந்நூறு அல்லது
கொல்லிமலை ரகசியம் என்னும் நூலில், கொல்லி மலை பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கியுள்ளன.
குறிப்பாக சோதி விருட்சம் என்னும் மரத்தின்
வேரில் துளையிட்டு அதில் இரு பலம் பாதரசத்தை ஊற்றி அடைத்து மூடி இரு மாதம் சென்று பார்த்தால்
இரசம் கட்டி மணியாக இருக்கும். அதனுடம் முப்பு என்னும் அதிசய மருந்துப் பொருளையும்
பிறவற்றையும் சேர்த்து மருந்தாகச் செய்து முறையாக ஒரு மண்டலம் உண்டால், நரை திரை மூப்பு
நீங்கி நூற்றுக் கணக்கான ஆண்டுகள் உயிர் வாழலாம் என்று தெரிவிக்கிறது.
சித்த மருத்துவத்தில் முக்கியமான பிரிவு
’மணிமந்திர ஒளடதம்’ என்பது. இதற்குப் பலவாறு
பொருள் கொள்கிறார்கள். மணி என்பது இரசமணியாகும். நீராக இருக்கும் பாதரசத்தை மருந்துப்
பொருள்களுடன் கூட்டினால் நெருப்பிற்கு நிற்குமாறு கட்டி மணியாக்குதல் என்பது பொருள்.
ஒரு சித்த மருத்துவர் இரசத்தை மணியாகக் கட்டுவதற்கு அறிந்திருக்கிறார் என்றால் அவருக்குச்
சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கூறுகளில் தெளிவும் அறிவும் உள்ளன என்பது பொருள்.
இரச
வாத வித்தை என்பது மற்றொரு பிரிவு. செம்பு போன்ற உலோகங்களைப் பத்தரைமாற்றுத் தங்கமாக
மாற்றுவது.. இதை ‘வாதம்’ சுடுதல் என்று கூறுவர்.
செம்பை, பொன்னாக்க முயன்று தோல்வியைத் தழுவியவர் பலருண்டு ‘வாதி கொட்டால் வைத்தியன்’ என்னும் மொழியும் இதனை உறுதிப்படுத்தும்.”
--பேராசிரியர் சிவா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக