சான்றோர் வாய் (மை) மொழி : 137. அறிவியல்
சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்-மருத்துவம்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
குறள். 355.
சித்த மருத்துவ நூல்கள்:
சித்த
மருத்துவ நூல்கள் ஏராளமாகவுள்ளன. பல நூல்கள் ஆராயப்படாமல் உள்ளன. பலவற்றிலுள்ள ’பரி
பாஷை’ சொற்கள் என்னவென்றே புரியவில்லை. திருமூல்ர், அகத்தியர், தேரையர், போகர், புலிப்பாணி
முதலியோரின் சித்த முறைகள் சிறப்பாக உள்ளன.
பொருள்களின் இயல்புகளைப் பற்றியன்நூல் ‘ குணவாகடம்’ எனப்து. பல குணவாகட்த்
திரட்டுகள் உள்ளன. அகத்தியர் பெயரால் பல மருத்துவ நூல்கள் உள்ளன.
அகத்தியர் ஆயிரம். அகத்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்,
அகத்தியர் வைத்திய பூரணமும், சட்டை முனியின் வாத காவியம் ஆயிரம் , தேரையரின் தைல வர்க்கங்களும், திருமூலரின் எண்ணாயிரமும், கோரக்கரின்
ஏழு மூலிகை வைத்தியமும், போகர் எழுநூறும், தன்வந்திரியின் கருக்கடை நிகண்டும், புலிப்பாணி
வைத்தியமும், இரமதேவரின் கருக்கடை நிகண்டும், திருவள்ளுவரின் ஞானவெட்டியானும் சிறப்புற்ற
நூல்களுள் சில.
இவையெல்லாம்
செய்யுளாக உள்ளன. பழகுதமிழில் அமைந்துள்ளன. எளிதில் பொருள் விளங்கிக் கொள்ள
முடியாத குழூஉக்குறிச் சொற்கள் பல இடையிடையே இருக்கின்றன. மருந்து செய்யும் முறை பற்றிச் சொல்லிக்கொண்டே வரும் போது இடையிலே தொடர்பில்லாமல்
ஒரு தத்துவம் குறுக்கிடும். பிறகு மருந்து முறை தொடரும் ; பிறகு மந்திர முறைகள் சொல்லப்படும். இப்படி இடையிடையே
ஞான யோக மார்க்கங்களும் மருத்துவ நூல்களில்
இடம் பெறுகின்றன. பல நூறு ஆண்டுகளாக வாய்மொழியாகவே பயிலப்பட்டு அண்மைக்காலத்தில் அவை
எழுதப்பட்டிருக்க வேண்டும்.
சித்த மருத்துவத்திற்கு உள்ள
தலையாய சிறப்பு. ‘ தீர்க்க முடியாத நோய்கள் என்றும், அந்நோய்களுக்கு மருந்து
கிடையாது’ என்று கூறும் மருத்துவ முறைகளைப்
போலன்றி எந்த் நோயையும் தீர்க்க முடியும் என்று சித்த மருத்துவம் உறுதியாகக் கூறுவதே.
பழந்தமிழ்ச் சித்தர்கள் அறிவுபூர்வமாக
ஆண்டவன் உட்பட அனைத்தையும் ஆராய்ந்த விஞ்ஞானிகள்;
தத்துவம் தந்த மெய்ஞ்ஞானிகள் ; சித்த மருத்துவம் மூலம் உடற் பிணி போக்கியவர்கள்.
சமுதாயச் சீர்திருத்தம் வேண்டியவர்கள் ; கண்மூடிப் பழக்கங்களெல்லாம் தொலைந்து உண்மையான
இறை நெறி பரவப் பாடுபட்டவர்கள்.
--பேராசிரியர்
சிவா.
சித்தர்……..மருத்துவம்…
……. தொடரும்…………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக