சான்றோர் வாய் (மை) மொழி :
118. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர்
–சித்தர்கள்.
எப்பொருள்
எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்பது அறிவு.
குறள். 355.
இன்றைய
புதிய உலகம் கைக்குள் அடங்கிக் கிடக்கிறது. அறிவியலின் அசுர வளச்சியில் உலகம் மூழ்கிக்
கிடக்கிறது.
உலகம் முழுவதும் மருத்துவமனைகள் ; எண்ணிலடங்க நோய்கள் ; மனிதனைக் கூறுபோட்டு
ஆய்வுகள் நடக்கின்றன. மனிதன் தமிழன் வகுத்தளித்த
இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கைமுறையைத் தொலைத்துவிட்டு வாழ்நாள் முழுதும் நோயோடு
உலாவருகிறான். சிந்துவெளித் தமிழர்கள் உலகுக்கு வழங்கிய “ஓகம்” என்னும் அரியகலை மீட்டுருவாக்கம் பெற்று மக்களைக் காப்பாறிவருகிறது.
ஓகம்:
தொல்தமிழர்தம் அறிவாற்றலால்
விளைந்த அற்புதக் கலை. இக்கலை மிகவும் தொன்மையானது. சிவபெருமானை முதன்மைக் குருவாகக்கொண்டு,
சித்தர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது.
உடற்கூறுகளை உய்த்துணர்ந்து இன்றைய
அறிவியல் வியக்கும் வண்ணம் வாழ்வியலை வளப்படுத்தும் இக்கலை சிந்துவெளித் தமிழரிடம்
சிறந்தோங்கி இருந்ததற்கான அகழாய்வுச் சான்றுகள் கிடைத்துள்ளன. இஃது ஆரியர் வருகைக்கு
முன்பே தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருந்தது.
“The History of Yoga go back anywhere from
five to eight thousand years, depending on the perspective of the historians. It
evolved wholly in the land of India and while it is supposed by some scholars
that yogic practices were originally the
domain of the indigenous , non –Aryan (and pre – vedic ) peoples, it was first clearly expounded in the great vedic shastras (Religious texts.)
வேத காலத்திற்கு முன்பே யோகக் கலை செழித்திருந்த்து என்பதற்கு ஓர் அரிய
முத்திரை சிந்துவெளியில் கிடைத்துள்ளது. அம்முத்திரையில் யோக நிலையில் அமர்ந்திருக்கும்
ஓர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
Pre
- vedic findings are taken, by some
commentators, to show that “YOGA” existed
in some form well before the establishment of Aryan culture in the north Indian subcontinent .
A triangular amulet seal uncovered at the
Mohenjo – daro archeological excavation site depicts a male, seated on a low
platform in a cross – legged position, with arms outstretched. “ - (Govind Rawat, Yoga
: The Health Mantra, P. 30.)
இக்கலை கி.மு. 2500 வரை எந்த மொழியிலும்
எழுத்து வடிவம் பெறவில்லை. உபனிசத்துகளில் இக்கலைகுறித்த தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளன.
கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய பகவத் கீதையில் யோகக் கலைத் தத்துவங்கள் கண்ண பெருமானுக்கும் அர்ச்சுனனுக்கும் இடையே நடக்கும்
உரையாடலாக அமைந்துள்ளன. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பதஞ்சலி முனிவர் எழுதிய யோக சூத்திரங்களில் யோகக் கலை முழு விளக்கம் பெறுவதைக் காணமுடிகிறது.
பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட “ சித்தர்” மருத்துவம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது .……………………..…..…….தொடரும்…………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக