வெள்ளி, 17 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 125.. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்- திருமூலர்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 125.. அறிவியல்

சிந்தனைகள். தொல்தமிழர்சித்தர்கள்- திருமூலர்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.

 

நூறாண்டுகள் வாழ உதவும் மூச்சுப் பயிற்சியை அரிய அறிவியல் கருவூலமாகத் திகழும் திருமந்திரத்தில்

தலைவன் இடம் வலம் சாதிப்பார் இல்லை

தலைவன் இடம் வலம் ஆயிடில் தையல்

தலைவன் இடம் வலம் தன்வழி அஞ்சில்

தலைவன் இடம் வலம் தன்வழி நூறே.” (773)

 

 என்பதாவது உயிர்த்தலைவன் பிராணன்( உயிர் மூச்சு)  இடமாகவும் வலமாகவும் சென்று வரச் செய்வார்கள் ; பிராணனை இடப்பக்கம் வலப்பக்கமாக உள்ளிழுத்து நிறுத்தி வெளியிடும் மூச்சுப் பயிற்சியைச் செய்பவர்கள் அதிகம் பேர் இல்லை. மூச்சுக் காற்றை இடமாக  இழுத்து வலமாகவிடப் பழகிக் கொண்டால் சக்தி, ஞானஓளி வெளிப்படும். இடம்வலமாகப் பிராணாயாமப் பயிற்சி செய்பவருக்கு ஐம்புலன்களும் தம் இச்சை ஒடுங்கித் தன் இயல்பு அடங்கி இருக்கும். இப்படிப் பிராணாயாமப் பயிற்சி செய்வோர் ஆயுள் நூறாகும்.”

 

மறைமலை அடிகளார் :

மூச்சுக் காற்றின் கணக்கை அறிவியல் கண்கொண்டு ஆராயப் புகுவார் கூறுவது…

 

.” சராசரியாக நாளொன்றுக்கு 21,600 முறை முறை மூச்சுக் காற்றை உள்வாங்கி வெளியிட வேண்டியிருக்கிறது. நாம் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றானது பன்னிரண்டு அங்குலம் அளவு கொண்டிருக்கும். வெளிவிடும்போது நான்கு அங்குலமாகக் குறைந்துவிடும். மீதமுள்ள இரண்டு மடங்கு உடம்பில் தங்கிவிடும். நாளொன்றுக்குப் பாழாகும் காற்றின் அளவு 7200 அங்குலமாகும். வீணாகும் காற்றும் உடம்பில் தங்குவதற்குரிய பயிற்சியை மேற்கொண்டால் மரண பயமில்லை.”

 

 

வாழ்வில் தூய நெறி காட்டும்  வாழ்வியல் நூலாகத் திருமந்திரம் விளங்குகிறது என்பதை அறியாலாமே

.

“ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்

  உய்யக் கொண்டேறுங் குதிரை மற்றொன்றுண்டு

மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்

பொய்யரைத் துள்ளி விழுத்திடும் தானே.” (546.)

 

1.)     ஐவர்க்கு நாயகன் – ஐம்பொறிகட்குத் தலைவன் – உயிர்.

2.)     ஐவர் வாழும் ஊர் – ஐம்பொறிகள் இருப்பிடம்-உடல் ;

3.)     அவ்வூர்க்குத் தலைமகன் – ஆள்பவன் – மனம்.

4.)     குதிரை – உயிர்ப்பு – பிராணவாயு – மூச்சு.

 

அகத்தவப் பயிற்சி உடையார்க்கு மனமாகிய குதிரை அடங்கிப் பற்றுக்கொடுத்து ஒழுகும் ; முறையான பயிற்சி இல்லாத பொய்யர்க்குப் பற்றுக்கொடாது துள்ளி எழுந்து அவரைக் கீழே வீழ்த்தித் தான் வேண்டியவாறு சென்றுவிடும்.

 

 உயிரும் இடம்பும் ஒன்றே. இரண்டும் தனித்தனியாக இயங்குவதில்லை. உடம்பாலே உயிர் வாழ்கிறது….

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.” என்றார்.

 திருமூலர்.

 

 இனி யோகக் கலை குறித்தும் தெரிந்து கொள்வோம்.

.…………சித்தர்கள்..…திருமூலர்..…….தொடரும்…………

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக