சான்றோர் வாய் (மை) மொழி : 124.. அறிவியல்
சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்- திருமூலர்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
குறள். 355.
மூச்சுப் பயிற்சி :
“மூச்சுப் பயிற்சி உயிருக்குத் தேர்ச்சி “ என்பர்
சான்றோர்.
சோம்பல் மிகவும் சுகமானதுதான்
; ஆனால் அதுவே மிகவும் ஆபத்தானது. எந்திரமயமான இவ்வுலகில் தந்திரம் எனும் தன் திறம்
அறிந்து வாழ்தல் நன்று. நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை. ஆயுனும்
அதற்குத்தக்கவாறு உடலைப் பேணுதல் நன்று ;இல்லையேல்
பருவத்திற்குரிய பயன்களை நுகர முடியாமல் வாழ்க்கை, பிறர் தோள் கடுக்கும் சுமையாகிப்
போகும். உடலை உள்ளத்தையும் சீர்படுத்த கற்றே
ஆக வேண்டும்.
ஒன்றை
மட்டும் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும், நோய்க்கு மருந்துகள் கண்டுபிடிப்பது அறிவியலா..?
நோய்கள் அண்டவிடாமல் வாழக் கற்பது அறிவியலா..?
“ மூச்சை ஒழுங்காக விடுவதற்கே சோம்பல் பட்டால் உங்கள் மூச்சே அதிரடி நோய்களைக்
கொடுத்து, அனுபவியடா அனுபவி என்று ஈவு இரக்கம் இல்லாமல் உங்களைத் துன்புறுத்தும்.”
உன்னை நீ ஓதி உணர்வாய் என்பது மந்திர மொழி.
“ஏற்றி
இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கு
அறிவாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே” என்கிறார் திருமூலர்.
மூச்சுக் காற்றை
ஏற்றி இறக்கும் கணக்கை முறைப்படிக் கற்றுக்கொண்டு நாள்தோறும் பயிற்சி மேற்கொண்டால்
எமனையே எட்டி உதைக்கலாம் என்கிறது திருமந்திரம்.
ஐயா, மறைமலை அடிகளார் எழுதிய ‘மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை’ நூலைக் காண்போம்.
“நுரையீரலின்
முழுப்பாகமும் அசைந்து உயிர்க்காற்றை இழுத்து நிரப்பி வெளியிடுமானால் நமது உடம்பிற்கு
நோயே வராது. நம் முன்னோர்கள் இருந்த காலத்தில் அவர்களின் மார்பினுள்ளே இருந்த இந்த
உறுப்பின் முழுப்பாகமும் அசைந்து கொண்டே இருந்தது, இந்தப் புது நாகரிக காலத்திலோ என்னவென்றால்
மக்களிற் பெரும்பாலார்க்கு இந்த உறுப்பு முழுவதும் அசைவதே இல்லை, காற்பங்கோ, அரைக்காற்பங்கோ
தான் அசைந்து வருகின்றது. அதற்கு ஏது என்னென்றால் தூய உயிர்க்காற்று நிறைந்து நிற்கும்
இடங்களில் நாம் அக் காற்றை மிகுதியாக உள்ளிழுக்க,
நுரையீரலானது அவ்வளவு காற்றுக்கும் இடம் கொடுத்து அகன்று முழுமையும் அசைகின்றது.”
(ப.26.)
இதனால் காற்றுப்பையே கடவுளாக எண்ணத் தோன்றுகிறதல்லவா..? விதியை மதியால்
வெல்வார்க்குக் காலன் கயிற்றோடு வருவதில்லை..
நூறாண்டுகள் வாழ உதவும் மூச்சுப் பயிற்சியை அரிய அறிவியல் கருவூலமாகத் திகழும்
திருமந்திரத்தில்…
“ தலைவன் இடம் வலம் சாதிப்பார் இல்லை
…………………………………..
.…………சித்தர்கள்..…திருமூலர்..…….தொடரும்…………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக