சான்றோர் வாய் (மை) மொழி : 132. அறிவியல்
சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்- திருவள்ளுவர்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
குறள். 355.
பேராசான்
: அறிவியல் சிந்தனைகள்.
நோக்கு – காதல் பார்வை.
”நோக்கு-தல் ; கூர்ந்து பார்த்தல் ; சிறப்பாய்க்
கருதுதல் ; விரும்புதல் ; அணுகுதல்
(to see ; look at; behold; view)”
”மாத்திரை முதலா அடிநிலை காறும்
நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே.”
--தொல்காப்பியம், பொரு.409
தொல்காப்பியர்
செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாக நோக்கு என்பதைக் குறிப்பிடுகின்றார். இந்நூற்பாவிற்கு உரை வகுத்த இளம்பூரணர் “ மாத்திரை முதலாக
அடிநிலை யளவும் நோக்குதலாகிய கருவி நோக்கென்று சொல்லப்படும் என்றவாறு.
அஃதாவது யாதானும்
ஒன்றைத் தொடுக்குங் காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காது அது
தன்னையே நோக்கி நிற்கு நிலை. அடிநிலைகாறும் என்றதனான் ஓரடிக்கண்ணும்
பலவடிக்கண்ணும் நோக்குதல் கொள்க. அஃது ஒரு நோக்காக ஓடுதலும் பல
நோக்காக ஓடுதலும் இடையிட்டு நோக்குதலும் என மூன்று வகைப்படும்” என்று கூறுவார்.
இதனால் நோக்கு என்றது முற்று முழுதாக
ஒன்றினைப் பார்ப்பது; (ஆராய்வது – ஈடுபாடு
கொள்வது)
அதனாலன்றோ
ஆன்றோர் நோக்கு என்னும் பார்வையைக் காதல்
மொழியாகக் கண்டுள்ளனர்.
காதல் பிறப்பது கண்கள் வழியே.
ஆணும் பெண்ணும் நேரெதிர் பார்வை பரிமாற்றம் காதல் பிறக்கும் களமாகும் என்பதை சப்பான் ஆய்வாளர்கள் அறிவியல்
வழி மெய்ப்பித்துக் காட்டியிருக்கின்றார்கள். ஒத்த பருவம் அமைந்த
பருவத்தினர் காதல் வயப்படுதல் எவ்வாறென இவ்வாய்வு விளக்குகிறது. பருவத்தினர் பார்வைகள் ஆயிரம் இருந்தும் குறிப்பிட்ட ஒரு பார்வை மூளையில் தாக்கத்தை
ஏற்படுத்திக் காதலை மலரச் செய்கிறது.
இவ்வறிவியல்
உண்மை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதை அறியமுடிகிறது.
குறிப்பாகத் திருவள்ளுவர் இவ்வறிவியல் உண்மையை இன்பத்துப்பாலில் மிக
விரிவாக எடுத்துப் பேசுகின்றார். திருவள்ளுவர் அன்றே அறிவியல்
கண்கொண்டு ஆராய்ந்தார் என்று சொல்லவில்லை ; அறிவியல் சிந்தனைத் திறம் கொண்டிருந்தார்
என்றே சொல்கின்றோம் ; இன்று அவ்வறிவியல் சிந்தனை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு டாவின்சியின் ஓவியங்கள் இன்று அறிவியல் ஆக்கம் பெற்றனவோ அதேபோல்
திருவள்ளுவரின் அறிவியல் சிந்தனைகள் உலகம் ஒப்புக்கொள்ளுமாறு மெய்ப்பிக்கப்படும்.
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்
தாக்கணங்கு
தானைக் கொண்டன்னது உடைத்து. 1082
இப்பெண் எனது
பார்வைக்கு எதிராகப் பார்த்தல் – தானே வருத்துகின்ற இப்பெண் சேனையையும்
கொண்டுவந்த தன்மையினை உடைத்து.
கண்ணொடு கண்ணினண நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில. 1100
காதலர் இருவருடைய கண்கள் நோக்கால் ஒக்குமாயின் அவர்கள் சொல்லுகின்ற
வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடையன அல்லவாம்.
காதல் இனிக்கும் – Love is Swee
காதல் சிறப்புரைத்தல்
பாலொடு
தேன்கலந் தற்றே பணிமொழி
வால்எயிறு
ஊறிய நீர். -குறள்.1121
இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . – பாவாணர்
CHAPTER
– 113
ON LOVE’S EXCELLENCE
The nectarine fluid in which are steeped the
milk-white teeth, of my lady of gentle speech,
Is like the delicious mixture of milk and honey.
(Tr.) Dr. S.M. Diaz.
The dew on her white teeth, whose voice is soft and
low,
Is as when milk and honey mingled flow. (Tr.) Dr. G.U. Pope
Love emotions- affection sweet
fluid that is secreted in the fair maiden’s mouth. It has been proved by the scientists water taste sweeter, when
love aggravates in men and women.
அறிவியல்
நோக்கு
Love
makes water taste sweet
New
York: Love really is sweet. Both candy and water taste sweeter when people
think about love, a new study has found………………….. We always say ‘ love is sweet’.
We thought let’s see whether this applies to love “said researcher Kai Qin Chan, at Rebound University Nijmegen
in the Netherlands. Chan and colleagues conducted three experiments on 197
students at the National University of Singapore…………………………. Love made the water
taste sweeter …. ”
– Times of
India 27/OI/14.
காதல்
வயப்பட்டோர் உணர்வின் வழி, அவர்தம் வாயில்
சுரக்கும் உமிழ் நீர் இனிமை உடையதாய்
இருக்கும்.எனவே தண்ணீரும் சுவை மிகுந்து தோன்றும்; தண்ணீருக்கென்று சுவை ஏதும்
இல்லை என்பது அறிவியல். அருவி நீர் இனிமை
உடையது என்பதும் ; மான் உண்டு எஞ்சிய
கலங்கிய நீர் தேன்கலந்த பாலினும் மிக்க இனிதாயிற்று என்பதும் காதல் வயப்பட்ட
நிலையை உணர்த்தும்.
. மழை - அறிவியல்
“ மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக்
குறிக்கும். மழை
எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில்இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின்வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களைஅடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று
மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர்
இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்)
இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது
ஏற்படுகிறது. மழை
வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகிவிடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும்ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப்
பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என அழைக்கப்படுகின்றது.”
---விக்கிபீடியா.
தமிழர் மருத்துவம் –
Surgery and Medicare among the Tamils
ஒட்டுமொத்த உலக மக்களுக்கெல்லாம் நெறியான வாழ்க்கை
முறையை ஒற்றை வரியில் உணர்த்தினான் தமிழன்.
”அளவுக்கு விஞ்சினால்
அமிழ்தமும் நஞ்சு” ( Too much of
anything is good for nothing ) தொன்மைத் தமிழின் பழமொழியாம் இத்தொடர் இவ்வுலகில் ’பொருந்தா
இடம் ’ என்று ஒன்றில்லை. இன்னும் எத்தனை
ஆண்டுகள் ஆனாலும் என்றும் இளமையுடன் இருக்கவல்ல ஆற்றல் வாய்ந்த ; பொருள் பொதிந்த பொன்மொழி இதுவே.
திருவள்ளுவரும் …
மிகினும்
குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா
எண்ணிய மூன்று. (941) என்றார்.
சித்தர்களாகிய மருத்துவ நூலார் வகுத்தளித்த மருத்துவத்தில் வாதம் பித்தம் சிலேத்துமம் என்ற மூன்றனுள் எதுவொன்று மிகினும் குறியினும் நோய் செய்யும் என்றார். இஃது உடலியல் சார்ந்த அறிவியலாகும்.
நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று- மருத்துவ நூலார் ஊதை(வாதம்) முதலாக எண்ணிய முக்கூறுகளும்; மிகினும் குறையினும் நோய் செய்யும்-தாம் இருக்க வேண்டிய
அளவிற்குக் கூடினாலும் குறைந்தாலும் உடம்பிற் பல்வேறு நோய்களை உண்டுபண்ணும்.
'வளிமுதலா
வெண்ணிய மூன்று' ஊதை பித்தங் கோழை (சிலேட்டுமம்)
என்பன. ஐ அல்லது ஐயம் என்பதும் கோழைக் கொருபெயர்.
இம் முன்றும் உடம்பிலிருந்து வெவ்வேறு நற்றொழில் செய்யும் இன்றியமையாத
கூறுகளேயன்றி நோய்களல்ல.மூச்சும் பேச்சும் உட்பொருளிடமாற்றமும்
வெளியேற்றமும் தனித்தும் பிற தாதுக்களோடு கூடியும் நிகழ்த்துவது ஊதையின் தொழில்கள்;
உண்டதன் செரிமானத்திற்கு உதவுவது பித்தநீர்; தசைநார்களின்
மழமழப்பான இயக்கத்திற்கு உயவுநெய்போற் பயன்படுவது கோழை. இவை உணவுடை
செயல்களின் ஒவ்வாமையாலும் இயற்கை வேறுபட்டாலும் மிகுதலுங் குறைத்தலும் நேரும் பொழுதே,
அவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும் என அறிக.
----ஞா. தேவநேயப் பாவாணர்.
கிரேக்கத்தில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்த ஹிப்போகிரடிஸ் நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படுகின்றார்.
நோய் – பேயினாலோ சாபத்தினாலோ வருவதல்ல
; அது மனித உடலில் ஏற்படும் குறைபாட்டினால்தான் வருகிறது. உடலில் ஏற்படும் குறைபாடுகளை உடலே தன்னளவில் சரி செய்துகொள்ளும் ஆற்றலுடையது
என்று கூறினார்.
திருவள்ளுவர்
மருந்து என்ற அதிகாரத்தில் கூறியுள்ள செய்திகளைப் படித்துப்பாருங்கள் திருவள்ளுவரின்
மருத்துவ அறிவியல் அறிவு தெரியும். இயற்கை வழிப்பட்ட நமது மருத்துவத்திற்கு
ஈடு இணை ஏதும் இல்லை என்பது புரியும். சித்தர்களின் அன்றைய மருத்துவ
அறிவியல் இன்றும் பொருந்துகிறது என்றால் அதன் மகத்துவத்தை என்னவென்று சொல்வது..!
நோயும் பிணியும் கண்டறிந்ததோடு அறுவை மருத்துவமும் செய்ததற்கான சான்றுகளும்
இலக்கியங்களில் உள்ளன.
இந்த
மருத்துவ அறிவியலின் வளர்ச்சியும் தொடர்ச்சியும் நைந்து போனதற்கு என்ன காரணம்
– ஆங்கில மோக அடிமைப்புத்திதானே..; தீங்கு தருவதாயினும்
ஆங்கில மருத்துவத்தை நாடி ஓடுவதேன் ? நாம் இயற்கையை விட்டு வெகுதொலைவு
சென்றுவிட்டோம் ; ஓடி ஒளிந்த இடத்தில் உண்மை உறங்கிக்கிடக்கிறது.
தமிழன் மருத்துவத்தைத் தொழிலாகச் செய்யாமல் தொண்டாகவே செய்தான்
; அதனால் அதன் அருமை புரியாமல் போயிற்று.
எத்தனை நூற்றாண்டுக்கு
முந்தைய தொலைநோக்குப் பார்வை, இன்றைய உலகத்திற்கு – மக்கள் வாழ்வியலுக்குப் பொருந்தி
அமைகிறதே…
செயற்கை அறிந்தக்கடைத்தும்
உலகத்து
இயற்கை அறிந்து செயல் .குறள்.637
செயற்கையால் புதியதோர்
உலகம் செய்யலாம் – முன்னேறிவிட்டோம் என்று முண்டியடித்துக்கொண்டு
கூவலாம் – நிலவில் குடியிருக்க முந்தலாம் – மனிதன் வாழ்நாளை உயர்த்திவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளலாம் – இவையெல்லாம் அறிவியல் அற்புதங்கள் என்று அறைகூவல் விடுக்கலாம்..
இவையெல்லாம்
இயற்கையின் இருப்பு அறியாது - இயக்கம் அறியாது - வலிமை அறியாது இயற்கை விதியை அழித்தெழுதும் முயற்சியே என்பதை இயற்கை உணர்த்திக்கொண்டே இருப்பதை
அறியமுடிகிறதல்லவா..? இனி இந்த உலகம் என்னாகுமோ என்ற அச்சத்தில்
மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இயற்கையோடு இயைந்து வாழ்தல்
என்பது தமிழன் கண்டுபிடித்த அறிவியல்
உண்மை என்பதை இக்குறட்பா உணர்த்துகிறது
இக்காலத்து மட்டுமன்று
இனி எக்காலத்தும் இவ்வறியல், உலகத்திற்குப் பாடமாக அமையும் என்பதில்
ஐயமில்லை.
மருந்தில்லா மருத்துவம்
உணவே
மருந்து
சாவா மருந்து,
மூவா மருந்து என்றெல்லாம்
தமிழர் கூறுவர். சாகாமல் இருக்கவும் முதுமை தோன்றாமல்
இருக்கவும் மருந்து கண்டுபிடிக்கத்
தமிழன் மேற்கொண்ட அறிவியல் முயற்சி.
நோயின்றி வாழ..
உடம்பை
நோயின்றி வளர்த்தால்தான் உயிரை வளர்க்க இயலும். நோயின்றி வாழும் வழிமுறைகளைக்
கண்டுபிடித்துக் கூறுவது அறிவியலா.. நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது
அறிவியலா..? முன்னது, இயற்கை நல்கும் நன்மை
; பின்னது, செயற்கை நல்கும் தீமை கலந்த நன்மை.
திருவள்ளுவர் மருந்து (அதி. 95)என்ற அதிகாரத்தில் கூறியுள்ள கருத்துக்களைப்
படித்துப் பாருங்கள். திருவள்ளுவரின் மருத்துவ அறிவியல் அறிவு
தெரியும். திருவள்ளுவரின் கருத்துக்களைப் புரிந்துகொண்டோரே முழுமருத்துவராகும்
தகுதி உடையவர்.
நோயும் மருந்தும்
மருத்துவனுக்கு நோய் அறியும் முறையை
இரண்டு குறட்பாக்களில் சொல்லிக் கொடுக்கிறார் வள்ளுவர்-
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். –948
நோய்
கண்டறிதல்- காரணம் கண்டறிதல் - நோய் நீக்கும் வழி அறிதல்
- எவ்வழி நலம் பயக்கும் என ஆராய்தல்.
உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். –949
நோயுற்றான்
தன்மை அறிதல்
- நோயின் தன்மை அறிதல்
- நோயுண்ட காலம் அறிதல்-
மருத்துவன் இவை யாவற்றையும் கருத்தில்கொண்டு மருத்துவம் செய்தல் வேண்டும்.
உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச்
செல்வான்என்று
அப்பால் நாற்கூற்றே
மருந்து. --950
மருந்து
என்பது யாதெனின்
- நோயாளி – மருத்துவன் - மருந்து – மருந்து ஆக்குநர் ஆகிய இந்நான்கும் ஒருங்கிணைந்து
இயல்வதே நோய் தீர்க்கும் மருந்தாம்.
இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
எத்துணையளவு அறிவியல் வளர்ந்தாலும் அந்நிலையிலும் திருவள்ளுவரின் இந்த மருத்துவ அறிவியல் அரிச்சுவடி பாடம்
நின்று நிலைக்கும்.
உணவே மருந்து
மருந்தென
வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது
போற்றி உணின். –942
உடல்
நலம் உணவில் தொடங்குகிறது.
உணவளவே உடல்; உடலளவே உயிர்.
அளவறிந்து
உண்க
; பசித்து உண் ; உன் உடலுக்கு ஒவ்வாத உணவைத் தவிர்த்துவிடு; வயிற்றைக்
குப்பைத் தொட்டி எனக் கருதாதே ; மிதமிஞ்சிய உணவு உணின் நோய்பல்கிப்
பெருகும் ;
மேற்சுட்டிய
விதிகளைப் பின்பற்றி உடல் நலத்தை பேணாதவன் மருத்துவர் கையகப்படுவான்.
நோயின்றி வாழ உண்ட உணவு நன்றாகச் செரித்தபின்பு உண்டுவந்தால்
உடம்புக்கு மருந்து என்ற ஒன்று தேவையே இருக்காது என்கிறது வள்ளுவம்.
தவறான உணவுப் பழக்கவழக்கங்களே பல நோய்களுக்குக் காரணம் என்று இன்றைய மருத்துவ அறிவியலும் கூறுகின்றது.
உலகின் பல்வேறு நாடுகளில் உணவு அறிவியல் குறித்த ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
அறிவியல் நோக்கு
உணவு அறிவியல் என்பது உணவுப் பயிர்களின் அறுவடைக்கும் (அல்லது உணவு விலங்குகள்
கொல்லப்படுவதற்கும்) நுகர்வோர் அதனை உட்கொள்வதற்கும்
இடையில் உணவினைப் பற்றிய அனைத்து நுட்பக் கூறுகளையும் ஆராயும் அறிவியலாகும்.
இது வேளாண் அறிவியல் துறைகளில் ஒன்றாகவும் ஊட்டத் துறையில் இருந்து வேறுபட்டதாகவும்
கருதப்படுகிறது.
–விக்கிபீடியா
உடற்கூறியியல்:
சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
. 27.
உளவியல் :
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னச் சுடும்.
293
மேற்சுட்டியுள்ள
குறட்பாகளின் அறிவியல் சிந்த்னைகளை உற்று நோக்குங்கள் , உண்மை விளங்கும்.
…சித்தர்கள்..…
……. தொடரும்…………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக