சான்றோர் வாய் (மை) மொழி : 122.. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்- திருமூலர்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
குறள். 355.
சித்தர்கள் வரிசையில் முதலிடம்
பெறும் பேரறிஞர் – திருமூலர்.மனிதகுலம் நோய் நொடியின்றி நூறாண்டுக் காலம் வாழ்வதற்குரிய
அரிய நெறிகளை வழங்கியவர் திருமூலர்.
இறை நெறி :
அன்பும்
அறிவும் அடக்கமுமாய் நிற்கும்
இன்பமும்
இன்பக் கல்வியுமாய் நிற்கும்
இறைவன்………………………….” என்று இறைவனின் குணநலன்களைப் போற்றுகிறார்.
“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை,
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே.” – என்னும் திருமூலர்
வாக்கு, தன்னை அறிந்து ; தன் ஆற்றல்களை அறிந்து ; தன்னைச் சுற்றிவாழும் மனிதர்களை அறிந்து எவனொருவன் வாழ்கின்றானோ
அவனே கேடின்றி வாழ்வான் என்கிறார்.
“நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்
நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு
நெறியின் நெருஞ்சி முள் பாயாகிலவே.”
வாழ்வில்
சான்றோர் கூறும் நல்ல நெறிகளை ஏற்றுப் போற்றாது மனம் போன போக்கில் நடந்தால் நெருஞ்சி
முள்ளைப்போல் துன்பங்கள் தொடர்ந்து வந்து துன்புறுத்தும். ஆசா பாசங்களை அடக்கி நெறி
நின்றால் என்றும் இன்பமே.
மனத்திட்பம் :
“நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாய் பரமன் இருந்திடும்
சிற்றம்பலம் என்று தேர்ந்து கொண்டேனே.”
வெளியெல்லாம் அடங்கியிருக்கும் புருவ நடுவில் எண்ணத்தையும் உயிர் மூச்சையும்
ஒடுங்கியிருக்கச் செய்யும் வன்மையுடையது கேசரி முத்திரை, இதனைத் தீக்கை, என்றும் கூறுவர்.
அருட்பிரகாச வள்ளலார், அருட்பெருஞ்சோதி அகவலில் குறிப்பிடும் அருள்வெளிப்பதி
என்பது இருகண்களுக்கு இடையே புருவ மத்தியில் அமைந்த இடைவெளியினை இது கீழ் ஒன்றும் மேல்
ஒன்றுமாக அமைந்த (ஃ) முப்புள்ளி வடிவாகிய ஆய்த எழுத்தினைப் போன்று இரண்டு கண்களுக்கு மேல் மத்தியில் அமைந்திருத்தலின் ’ஒள’
கார எழுத்தினை அடுத்துக் கூறப்பட்டுள்ளமை உய்த்துணர்தற்கு
ரியதாகும்.
திருமூலர் கூறியவாறு நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளியில் உள்ளத்தை ஒன்றவைத்துத்
தியானிக்கும் முறையே சிறந்த தவமாகும் என்று விளக்குகிறார் அறிஞர் க. வெள்ளைவாரணனார்.
.........................திருமூலர்............தொடரும்.......................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக