வெள்ளி, 3 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 116. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் – சங்க காலம்.-2.

 

சான்றோர் வாய் (மைமொழி : 116. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர்சங்க காலம்.-2.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.

 

தொல்தமிழர்தம் வாழ்வியலில் இறை வழிபாடு :

 மிகப் பழமையான வணக்க முறைகளில் முருகன் வணக்கமும் ஒன்று. குறிஞ்சி நில மக்களின் வழிபாட்டில் முருகன் முதலிடம் பெற்ற இறைவனாவான். இவ்வழிபாடு குறித்து , சங்க இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. பின்னர் நிலத்திற்கேற்றவாறு இறைவழிபாடுகள் தோற்றம் பெற்றன.

 

 சங்ககாலம் பொற்காலம் என்றால் அக்கால ஆட்சிமுறையில்  மன்னர் ஆட்சியும் ஆங்காங்கே குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்தனர்.  மன்னர்கள் ஆட்சியானாலும் அவர்களை அறவழி ஆட்சிபுரிய  அறிவிற்சிறந்த புலவர் பெருமக்கள் ஆற்றுப்படுத்தினர். மக்கள் வாழ்க்கையும் அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி, என்ற நிலையில் நாடு வளம் பெற்று ஏழ்மையும் வறுமையும் ஒழிய ஈகை குணமுடைய பெருமக்களால்,மக்கள் செம்மையாக வாழ்ந்தனர்.

  

பண்டைத் தமிழர் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சிறப்புற்று விளங்கினர்.

இம்மை வாழ்க்கை அல்லது இவ்வுலக வாழ்க்கையில் தான் ஆர்வம் கொண்டிருந்தனர். இவ்வுலக வாழ்கையை உண்மை என்று கருதினார்கள் .  சமுக நீதிக்கு உட்பட்டு இவ்வுலகிலேயே இன்பத்தைத் தேடிப் பெறலாம் என்ற கருத்துகளை ஆற்றுப்படை நூல்களில் காணலாம். தொல்தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். இவ்வுலகம் இயற்கையின் ஆக்கமே என்று கண்டனர்.

 

மண் திணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்

தீமுரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத் தியற்கை போல.”

என்று இவ்வுலகம் ஐம்பூதங்களாகிய தனிமங்களால் ஆனது. அஃதாவது ஐந்து தனிமங்களும் ஒன்றிற்கொன்று முரண்பட்டவையாகவும் உறவு உடையதாகவும் விளக்கப்பட்டன. இவ்வைந்து தனிமங்களின் பொதுத் தன்மையே – இயற்கை ஆகும்.

தமிழர் நிலம் ;

மேற்கூறிய இயற்கை இயல் :

 அகத்திணை, புறத்திணை என்றது – வாழ்வியல்

கைக்கிளை முதலாகப் பெருந்திணை வகுத்த ஏழு திணைகளும் – ஒழுக்கவியல்.

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்  என வகுத்த  நால்வகையும் – நிலவியல்.

 நகை, அழுகை முதலான எட்டு வகை மெய்ப்பாடுகள் – புனைவியல்.

 மக்கள் வாழ்க்கையின் இருபெரும் பிரிவுகள்

1. அகம் : “ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும்…..தொடரும்………………….

 

:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக