சான்றோர் வாய் (மை) மொழி : 123.. அறிவியல்
சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்- திருமூலர்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
குறள். 355.
தியானம் ;
கண்களை மூடி, மனத்தை ஒருநிலைப்படுத்தி அமைதியாக இருந்து "ஓம்" என்னும் மந்திரத்தை
உள்ளுக்குள் ஒலித்தலே ‘தியானம் ‘. மனம் தெளிவடையும்
உடல்நலம் சீராகும் உயிர் வளம் பெறும் வாழ்க்கையில் அச்சம் அகலும். அஃதாவது ‘மரண
பயம்’ விலகும்.
தியானப் பயிற்சி :
“கொப்பூழுக்குப் பன்னிரண்டு விரல் அளவில் கீழுள்ளது மூலாதாரம். அம்மூலாதாரத்தைத்
தூண்டித் தொழிற்படுத்தும் மந்திரம் இயற்கைச் செந்தமிழ் மறையாகிய ‘ஓம்’ என்னும் ஒலியே
என்கிறது, திமூலரின் திருமந்திரம்.(560).
“
முகத்தின் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தின் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே”
தியானப் பயிற்சியால் பரம்பொருளை ஒளி வடிவாகக் காண இயலும். பரம்பொருளை
முகக் கண் கொண்டு பார்ப்பது மூட்த்தனம் ; அகக் கண்கொண்டு பார்ப்பதே மகிழ்ச்சி. அகக்
கண்ணால் காணும் ஆனந்தத்தை விவரிக்க இயலாது என்பது உண்மையே.
அறிவியல்
சிந்தனை:
இதய நோய் வல்லுநர் மருத்துவர் வி. சொக்கலிங்கம் கூறும் அறிவியல் கருத்துககளைக்
காண்போம்.
பலவகையான மன நிலைகளில் மூளையின் செயற்பாடு சீராக அமையாததனால் உணர்ச்சி
வயப்படும் உடம்பில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன ; அவற்றின் விளைவாக……..
வேகமான இதயத்துடிப்பு ; இரத்த அழுத்த நோய் ; சர்க்கரை நோய் ; இரத்தக்
கொழுப்பின் அளவு அதிகரித்தல் ஆகிய பிணிகள் ஏற்படுகின்றன. அதன் விளைவாக அவை ஒருவரைத்
தீய பழக்கங்களான புகை பிடித்தல் . மது அருந்துதல், போன்றவற்றுக்கு ஆளாக்குகின்றன. நாள்தோறும்
உடற்பயிற்சியில் ஈடுபடுவதையும் தவிப்பதனால் உடல் பருமனும் எடையும் அடிகமாகி இதய இரத்தக்
குழாய்கள் சுருங்குவதனால், இரத்த ஓட்டம் தடைப்பட்டு, உயிர்க்கொல்லி நோயான மாரடைப்புக்கு
ஆளாக்குகின்றது.
இந்நோயினால்
மட்டும் இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்குக் குறைந்தது 90 பேர் உயிர் இழக்கின்றனர்.
இந்த அதிர்ச்சிதரும் போக்கிற்கு
முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி மன இயல்பின் தன்மையை முறைப்படுத்துவதே.
இந்நிலையை அடைய நம் முன்னோர்களான சித்தர்கள் பலகாலமாகவே மக்களுக்குக்
கூறிவருவது தியான் முறைதான். என்கிறார் மருத்துவர்.
.…………சித்தர்கள்..…திருமூலர்..…….தொடரும்…………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக