சான்றோர் வாய் (மை) மொழி : 127.. அறிவியல்
சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்- திருமூலர்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
குறள். 355.
ஓகநிலை
:
மனமே..! கழிந்ததற்கு இரங்கிக் காலத்தை வீணாக்காதே.
உடல் நலமும்
உள்ளத் தெளிவும் இன்றே பெறுக. வாழ்க்கைப் பயணம் இனிதே அமையும்.
”நெறிவழியே சென்று
நேர்மை
உள்
ஒன்றித்
தறி
இருந்தால்
போல்
தம்மை
இருத்திச்
சொறியினும்
தாக்கினும்
துண்ணென்று
உணராக்
குறி
அறிவாளர்க்குக்
கூடலும்
ஆமே” –திருமூலர்.
“ மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள
வழியாகப் பிராணனை மேலே செலுத்தி, நெற்றிக்கு நேர் புருவ மத்தியில் மனத்தை ஒன்றி நிற்கச்
செய்து, அடித்த கட்டுத்தறிபோல் ஒரே இடத்தில்
அசைவற்றுத் தம் உடலை இருக்கச் செய்து, பிறர் வந்து உடலைச் சொறிந்தாலும் அடித்துத் துன்புறுத்தினாலும்
இவை எதையும் உணராது, அடைய வேண்டிய இலட்சியமே குறியாக இருந்து தியானம் செய்பவருக்கு
யோகம் எளிதாகக் கைகூடும்.”
அறிவியல் ஆய்வு:
இந்த யோக நிலை உலக அளவில்
அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. டிஸ்கவரி தமிழ், தொலைக்காட்சியில் சூப்பர்
ஹியுமன்ஸ் (Super Humans) என்றொரு தொடர் ஒளிபரப்பாகியது,அதில் உலகில் தலை சிறந்த ஓகக் கலை வல்லுநர்கள் வலி உணரா நிலையை மெய்ப்பித்துக் காட்டினர்.
புரூஸ்லி (Bruce
Lee, 1940 – 1973. Bruce = strong one) வாழும் கலையில்
வல்லவராகவும் குங்ஃபூ கலையில் கைதேர்ந்தவரகவும் விளங்கி உலகப் புகழ் பெற்ற புரூஸ்லி
வாழும் கலைக்குப் புதிய இலக்கணம் வகுத்தவர். புரூஸ்லி ஓகக் கலையில் வல்லவராக அரிய அளப்பரிய
ஆற்றலை வெளிப்படுத்தும் ஞானத்தைக் கைவரப் பெற்றவராவார். ஓகக் கலை நிலைகளை ஆய்வு செய்து, தன்னுடைய நாள் குறிப்பேட்டில் ஓகக் கலை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து
வந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அன்றைய இந்தியா என்பது தமிழ் நிலமே என்று அறிக.
இன்றைய அறிவியலுக்குச் சவால்
விடும் அளவுக்கு மனவளக் கலை விளங்குவதை டிஸ்கவரி தமிழ் , அன்று இரவு எட்டு மணி நிகழ்ச்சி
உணர்த்தியது.
மன வலிமை மரணத்தை வெல்லுமா..?
மரணமிலாப் பெருவாழ்வு வாய்க்குமா…?
வள்ளலார் வாக்கு மெய்ப்படுமா…?
மேற்குறித்துள்ள வினக்களுக்கு விடை கூறிய தொலைக்காட்சி….
1.)
30 மீட்டர் உயரம் 11ஆவது மாடியின் கைப்பிடிச் சுவரின்
விளிம்பில் நின்று உடற்பயிற்சி செய்தார்.
2.)
300 மீட்டர்
உயர மலை உச்சியின் விளிம்பில் தியானமும் உடற்பயிற்சியும் செய்தார்.
” மரண பயம் நீங்கினால்தான் மனிதன் வாழ்த் தொடங்குகிறான்.” என்றார்
3.)
பனி மனிதன் (Ice man) வெற்றுடம்போடு உறைபனியில் ஆசனம்.
மனத்தைத் தன்வயப்படுத்தி உடற்பயிற்சி, வெறுங்காலாலே பனிமலையில் மரத்தான் ஓட்டம் முதலியவற்றை
நிகழ்த்திக்காட்டினார்.
மேற்குறித்துள்ளவர்களின் மன ஆற்றலை அறிவியல் சோதனைக் கூடத்தில் விஞ்ஞானிகள்
ஆய்வு செய்து “ இவர்கள் உண்மையிலேயே சூப்பர் ஹியுமன்ஸ் என்று சான்று அளித்தனர்.
இன்பநிலை :
மனவளக் கலை மரண பயத்தை நீக்கும்
என்பது அறிவியல் ஒப்புக்கொண்ட உண்மையாகும். அன்றாடம் பயிலும் ஓகக் கலையின் நிறைவு நிலை
இன்ப நிலையாகும்.
“
ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்
வென்றான் தன் வீரமே வீரம் – என்றானும்
சாவாமற் கற்பதே கல்வி தன்னைப் பிறர்
ஏவாமல் உண்பதே ஊண். (ஒளவையார், தனிப்பாடல்.)
ஒன்றே இறை - சிவன் ; ஐம்புலன்
அடக்கல் – திண்மை ; சாகாக் கல்வி – மரணமிலாப் பெருவாழ்வு.
சாதலால் வரும் துன்பத்தினை மன உணர்வு உடைய மாந்தர்கள் தாம் மேற்கொண்டு
ஒழுகும் தவத்தின் ஆற்றலால் மாற்றி, இவ்வுலகில் இறாவா நிலையை அடைதல் கூடும் என்னும்
உண்மையைத் திருவள்ளுவர்….
“ கூற்றம் குதித்தலும் கைகூடுm நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு.” -269.
மனத்தை அறிவியல் கண்கொண்டு ஆராய்ந்தாயிற்று ; உளவியல் கண் கொண்டு உணர்ந்தாயிற்று
; இதனால் முன்னோர்கள் மொழிந்தவை யாவும் முற்றிலும் சரியே என்பது விடையாயிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக