ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

தமிழமுது –110. – தொல்தமிழர் உணவு –கள்..? கள்ளோடு கூடும் காம இன்பம்.

 

தமிழமுது –110. –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

பரிபாடல் : திரட்டு – 1:53 – 56.

கள்ளோடு கூடும் காம இன்பம்.

”அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்

புரியுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற

சூடு நறவொடு காமம் முகிழ் விரிய

சூடா நறவொடு காமம் விரும்ப …”

 பூமுடி நாகர் கோயிலில் செவ்வரியும் கருவரியும் படர்ந்த மை தீட்டப்பட்ட கண்களையுடைய விறலியரும் கூத்தரும் கூடிக் காண்பார் அனைவராலும் விரும்பப்படும் பாட்டினைப் பாடி ஆடலையும் செய்தனர். சூடுதற்குரிய நறவ மொட்டுடன அதனைச் சூடிய மைந்தர், மகளிரின் காமப் பண்பும் அரும்பி மலர்ந்து நின்றது, அத்தகைய ஆடவரும் மகளிரும் கள்ளோடு காம இன்பத்தையும் விரும்பினர்.

 

(கள் காம இன்பத்தை மிகுவித்தலின் கள்ளொடு காமம் விரும்ப என்றார். சூடு நறவு – சூடும் நறவ மொட்டு, நறவம் பூ,  வாசனைக் கொடி ; சூடா நறவு – கள் ;  நறவ மொட்டு அலரும் போதே மைந்தர், மகளிர் உள்ளத்தே காமம் முகிழ்த்தது ).

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

சனி, 30 ஆகஸ்ட், 2025

தமிழமுது –109. – தொல்தமிழர் உணவு –கள்..? கள்ளின் களிப்பும் ; காமக் களிப்பும்.

 

தமிழமுது –109. –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

ரிபாடல் :

 கள்ளின் களிப்பும் ; காமக் களிப்பும்.

”காமம் கணைந்து எழ கண்ணின் களி எழ

ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பாரவர் நிலை

கள்ளின் களி எழக் காத்தாங்கு…” 10: 63 – 65.

 

நெஞ்சத்திலே காமம் மிக்கு எழ, அதனானே தம் கண்களிலே  அக்காமக் களிப்புப் புறத்தார்க்குப் புலப்படும்படி தோன்றும் , அதனை அறிந்து ஊரில் உள்ளார் அலர் தூற்றுவாரோ என்று அஞ்சி காமக் களிப்பினைப் பிறர் அறியாதபடி மறைக்க முயல்வார் நிலைமை கள் உண்டவர் தம்பால் கள்ளின் களிப்புப் புறத்தார்க்குப் புலப்படத் தோன்றி நிற்க , தம் மனம் துன்புறும்படி ஊரவர் பழிப்பாரோ என்று அஞ்சி, அதனைப் பிறர் அறியாமல் மறைக்க முயலும் முயற்சியே – கள் உண்ட களிப்பினை யாவரும் அறியும்படி, தாமே பரப்பிப் பின் உலகம் பழி தூற்றலைக்கேட்டு உள்ளம் நடுங்குவர்.

தம் கண்ணில் தோன்றும் காமக் களிப்பினை மறைப்பவருடைய நிலைமை கள்ளுண்டு அதனால் உண்டாகிய களிப்பை மறைப்பவருடைய நிலைமையை ஒக்கும்.

 

(கணைந்து – மிகுந்து ; மன்னுமஞ்சி – மிகவும் அஞ்சி ; உளை – துன்பம் . )

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

 

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

தமிழமுது –108. – தொல்தமிழர் உணவு –கள்..? கள்ளுக்கு விலையாகப் பசுவின் இறைச்சி :

 

தமிழமுது –108. –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

பதிற்றுப்பத்து :

 கள்ளுக்கு விலையாகப் பசுவின் இறைச்சி :  

”காந்தளஅம் கண்ணி கொலைவில் வேட்டுவர்

செங்கோட்டு ஆமான் ஊனொடு காட்ட

மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு

பொன்னுடை நியமித்துப் பிழிநொடை கொடுக்கும்.” – 30: 9 -13.

 

காந்தள் பூவினால் செய்த கண்ணியையும் கொலை செய்யும் வில்லினையும்  உடைய வேட்டுவர், சிவந்த கொம்பையுடைய காட்டுப் பசுவின் இறைச்சியோடு, வலிமையான காட்டு யானையின்  கொம்புகளையும் எடுத்துக்கொண்டு, செல்வம் பொருந்திய  கடைத் தெருவிற்குச் செல்வர், அங்கு, தாம் வாங்கும் கள்ளுக்கு விலையாகப் பசுவின் இறைச்சியையும் யானையின் தந்தத்தையும் கொடுப்பர்.

 

(பிழி – கள் ; நொடை – விலை ; நியமம் – கடைத்தெரு ; ஆமான் – காட்டுப் பசு.)

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

 

வியாழன், 28 ஆகஸ்ட், 2025

Welcome to Google Analytics---- Kalappal.blogspot.com

 

Welcome to Google Analytics

ஆய்வறிக்கை-22 / 08 / 2025.

Kalappal.blogspot.com

Views

19.2K0

17 Aug18 Aug19 Aug20 Aug21 Aug22 Aug23 Aug02K4K6K8K

17 Aug 2025, 05:30:00

6,244

18 Aug 2025, 05:30:00

6,943

19 Aug 2025, 05:30:00

1,238

20 Aug 2025, 05:30:00

65

21 Aug 2025, 05:30:00

113

22 Aug 2025, 05:30:00

137

23 Aug 2025, 05:30:00

4,453

Top Referrers

 

 

 

Top Locations

2218,39518,395

Singapore

18,395

United States

292

India

149

Hong Kong

118

Brazil

68

United Kingdom

27

Canada

15

Vietnam

12

Germany

8

Other

109

Singapore

18.4K

United States

292

India

149

Hong Kong

118

Brazil

68

United Kingdom

27

Canada

15

Vietnam

12

Germany

8

Other

109

தமிழமுது –107. – தொல்தமிழர் உணவு –கள்..? பதிற்றுப்பத்து : விருந்து உணவு.

 

தமிழமுது –107. –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

பதிற்றுப்பத்து :  விருந்து உணவு.

 “தொல்பசி உழந்த  பழங்கண் வீழ

எஃகு போழ்ந்து அறுத்த வால்நிணக் கொழுங்குறை

மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு

நனைஅமை கள்ளின் தேறலொடு மாந்தி.” – 12: 15 – 18.

 

சுற்றத்தார் நீண்ட நாட்களாகப் பசொயால் வருந்திய துன்பம் தொலையுமாறு நின் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) அரண்மனையில் அரிவாளால் பிளந்து அறுத்த வெள்ளிய நிணத்தோடு கூடிய கொழுவிய துண்டாகிய ஆட்டின் இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட வெண்ணெல் அரிசியால் ஆன வெண் சோற்றினைப் பூக்களின் அரும்புகளினால் அமைந்த தெளிந்த கள்ளோடு சேர்த்து உண்டனர்.

 

 (நனையமை கள் என்றது தென்னை, பனை, ஈந்து முதலியவற்றின் அரும்பு விரியாத செவ்விப் பாளையில் வடித்தெடுக்கப்படும் கள். )

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

தமிழமுது –106. – தொல்தமிழர் உணவு –கள்..? மணம் கமழும் – கள்:

 

தமிழமுது –106. –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

 குறுந்தொகை :  மணம் கமழும் – கள்:

கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்

தன்ணம் துறைவன் காணின் முன் நின்று

கடிய கழறல் ஓம்புமதி தொடியோள்

இன்னள் ஆகத் துறத்தல்

நும்மின் தகுமோ என்றனை துணிந்தே.”296 : 4 – 8.

கள் மணக்கும் நெய்தல் மலரையும் நெய்தற் கதிர்களையும் விரும்பும் குளிர்ந்த துறைக்கு உரியவனைக்கண்டால், அவன் முன்னே நின்று கடுமையான சொற்களைக் கூறுவதைத் தவிர்ப்பாயாக ;  வளை அணிந்தவள் வருந்தும்படி அவளைப் பிரிந்து செல்லுதல் உனக்குத் தகுதியுடையதாகுமோ..? என்று கேட்கத் துணிந்து,  தலைவி,  தோழிக்குச் சொல்வதைப்போல் தலைவனுக்குக் கூறினாள்.

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

தமிழமுது –105. – தொல்தமிழர் உணவு –கள்..?நற்றிணை: கள் – விருந்துணவு.

 

தமிழமுது –105. –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

நற்றிணை: கள்விருந்துணவு.

குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம்

சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதில்

கான மஞ்ஞை கட்சிச் சேக்கும்

 கல் அகத்து எம் ஊரே செல்லாது

சேந்தனை சென்மதி நீயே பெருமலை

வாங்கு அமைப் பழுநிய நறவு உண்டு

வேங்கை முன்றில் குரவையும் கண்டே.” – 276 : 4 -10.

வலிமையான விலங்குகளை வேட்டையில் பற்றி வாழும் இயல்புடைய வேட்டுவர்தம் மகளிர் என்றாய் ; ஆனால் யாம் குறவர் மகளிரேம் ; மலை வாழ் கொடுச்சியரேம் ; உயர்ந்த  பரண் மீது இருக்கும் தினைப் புனக் காவலன் நெடிய கால்களுடன் , அமைந்த கட்டுப் பரணில் காட்டின் மயில்கள் தம் இருப்பிடமாக்க் கருதித் தங்கும்; இத்தகைய மலையிடையே அமைந்தது எம் ஊர் ; ஆகவே, நீ இப்பொழுது நின்னூர்குச் செல்லுதலைத் தவிர்க; எம்மூரில் தங்குக ; அங்கு,  பெரிய மலையில் விளைந்த வளைந்த மூங்கிலில்  முற்றிய நறவாகிய கள் உண்க ; வேங்கை மரம் அமைந்த முன்றிலிலே குரவை அயர்தலையும் காண்பாயாக ; பின் நீ நின் ஊருக்குச் செல்வாயாக.

என்று தோழி தலைவனிடம்  உலக இயல்பாகிய விருந்து ஏற்றலைக் கூறினாள்.

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

 குறுந்தொகை :

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

தமிழமுது –104. – தொல்தமிழர் உணவு –கள்..? நற்றிணை: கள்ளும் காமமும்:

 

தமிழமுது –104. –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

நற்றிணை: கள்ளும் காமமும்:

கள் மிக உண்ணினும் கமக் கூட்டம் மிகினும் கண் சிவந்து காட்டும் என அறிக.; கள்ளும் காமமும் மயக்கம் தருவனவாம்.

துறை கெழு மரந்தை அன்ன இவள் நலம்

பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய

உழையின் போகாது அளிப்பினும் சிறிய

 ஞெகிழ்ந்த கவின் நலம் கொல்லோ மகிழ்ந்தோர்

கட் களி செருக்கத்து அன்ன

காமம் கொல் இவள் கண் பசந்ததுவே.”- 35 : 7 – 12.

 

 (மரந்தை -  மாந்தை எனவும் வழங்கப்பெறும். இஃதொரு சேர நாட்டுத் துறைமுகப்பட்டினம்.) (நறா என்பது பூவை விளையவைத்த ஒருவகைக் கள். நறாக் கள் அதில் இடும் பூமொட்டுகள்.)

 

 மாந்தை நகர் போன்ற இவளது நலம் முன்பும் இத்தன்மை உடையதே, நீ காண்பாயாக இவளிடத்துக் களவுக் காலத்தில் நீ விலகாமல் இருந்து அன்பு செய்தாலும், இவள் கண் பசப்புற்றது ;  அது சிறிதளவு முயக்கம் நெகிழ்ந்தமையால் கெட்ட அழகின் மிகுதியோ..?  கள் உண்டார்க்குக் கள் இல்லாமற் போகும் காலத்து உண்டாகும் வேறுபாடு போன்ற காம வேறுபாடோ..? அவ்விரண்டும் அல்லவே. ( தலைவன், தலைவியை விட்டுச் சிறிதும் பிரியாது இருத்தல் வேண்டும் எனத் தோழி அறிவுறுத்தினாள்.)  

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

சனி, 23 ஆகஸ்ட், 2025

Welcome to Google Analytics......... ஆய்வறிக்கை............. Kalappal.blogspot.com Views

 

Welcome to Google Analytics

ஆய்வறிக்கை

Kalappal.blogspot.com

Views

19.2K0

17 Aug18 Aug19 Aug20 Aug21 Aug22 Aug23 Aug02K4K6K8K

17 Aug 2025, 05:30:00

6,244

18 Aug 2025, 05:30:00

6,943

19 Aug 2025, 05:30:00

1,238

20 Aug 2025, 05:30:00

65

21 Aug 2025, 05:30:00

113

22 Aug 2025, 05:30:00

137

23 Aug 2025, 05:30:00

4,453

Top Referrers

 

 

 

Top Locations

2218,39518,395

Singapore

18,395

United States

292

India

149

Hong Kong

118

Brazil

68

United Kingdom

27

Canada

15

Vietnam

12

Germany

8

Other

109

Singapore

18.4K

United States

292

India

149

Hong Kong

118

Brazil

68

United Kingdom

27

Canada

15

Vietnam

12

Germany

8

Other

109

தமிழமுது –103. – தொல்தமிழர் உணவு –கள்..?நற்றிணை: கள்,/ நறவு:

 தமிழமுது –103. –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

நற்றிணை: கள்,/ நறவு:

நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்

கள் கமழ்  பொறையாறு அன்ன என்

நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே.” -131-7-9.

 

தோழி, தலைவனிடத்து அவன் பெருமையைப் போற்றிக் கூறிய…!.

கள் உணவை உண்டலால்  மகிழ்ச்சி உடையவனும் நல்ல தேரை உடையவனுமான பெரியன் ( வள்ளல்) என்பானுடைய கள் மணம் கமழும் பொறையாறு போன்று சிறந்து அமைவது; அத்தகைய தோள் நலன்  பொலிவு அழிய நீவிர் எம்மை மறப்பதற்கு அரிது.என்றனள்.

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

தமிழமுது –102. – தொல்தமிழர் உணவு –கள்..? ”அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

 

தமிழமுது –102. –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

 

பழமொழி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானதோ? பழமொழிகள் பாமரர்கள் உருவாக்கும் அரிய பெரிய இலக்கியமாகும் ; உண்மைகளைக் காலங்கள் மாறினாலும் கருத்து மாறாமல் மக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றன.

 

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமே நஞ்சாகும் ; உணவாயினும் உடற்பயிற்சியாயினும் எதுவாயினும் அளவோடு துய்த்தல் வேண்டும். உடலியக்கம்கூடச் சீராக இருத்தல் நன்று ; ” மிகினும் குறையினும் நோய் செய்யும்என்றார் வள்ளுவர்.

கள்:

கள் எனும் சொல் – நற, நறா, நறவு, தேறல்  எனும் பெயர்களில் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன.

கள், ஓர் இயற்கை நீர்மம் தென்னங்கள், பனங்கள் ஈச்சங்கள், இவைதவிர,அரிசி கொண்டு சமைத்துண்ணும் கள்ளும் உண்டு.

.

திருவள்ளுவர் மருந்து என்றோர் அதிகாரம் படைத்து உணவே மருந்து என்று கூறியுள்ளார். அவரே கள் உண்ணாமை என்றோர் அதிகாரம் படைத்து ”உண்ணற்க கள்ளை” என்று கட்டளையிடுகின்றார். கள்ளை நஞ்சுக்கு ஒப்பாக  ”நஞ்சுண்பார் கள் உண்பவர்” என்றும் கூறியுள்ளார்.  எனவே எவ்வகையானும் கள் உணவாகாது என்றே அறிக.

 

தொல்தமிழர் வாழ்வில் கள் களிப்பு மிகுதிக்கு உரமாக அமைந்துள்ளதை அறியமுடிகிறது. விழாக் களத்திலும் வெற்றிக் கொண்டாட்டங்களிலும் கள் குடித்து மகிழ்ந்துள்ளனர். கள் குறித்துக்கூறும் சங்கஇலக்கியக் கருத்துகளைக் காண்போம்.

 

நற்றிணை:

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

தமிழமுது –101. – அபதானி பழங்குடியினர் தமிழர்களோ….? -2.

 

தமிழமுது –101. – அபதானி பழங்குடியினர் தமிழர்களோ….? -2.

இந்தியப் பழங்குடியினராகிய அபதானி மக்கள் குறித்த மேலதிகச் செய்திகளை டிஸ்கவரி தமிழ்த்  தொலைக்காட்சியில் 9 -1.2010, ஆம் நாள் கண்டேன். அச்செய்திகளைத் தொகுப்புரையாகக் கீழே காணலாம்.

 அபதானி மக்கள் தங்கள் சாதிக்குள் பெண் எடுப்பதில்லை. மாப்பிள்ளைப் பெண்ணுக்குப் பரிசு கொடுத்தல் ; பெண் வீட்டில் விருந்துண்ணல் ; சீர் செய்தல் முதலிய நிகழ்வுகள் நடைபெறும்.குழந்தை பிறந்த பின்தான் முறைப்படி திருமணம் நடக்கும்.

இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் இல்லை ; புதைத்து விடுவர். புதை குழியுள் இறந்தவர்க்கு வேண்டிய பொருள்களை போடுவார்கள். பச்சை மூங்கிலில் பாடை கட்டி, இருவர் மட்டுமே தூக்கிச் செல்வர்.

அபதானி மக்களின் பழக்க வழக்கங்களைப் பார்க்கும்போது அவையாவும் தமிழர்தம் பழக்க வழக்கங்களை ஒத்திருப்பதைத் தொலைக்காட்சியில் கண்டேன். ஒரு குழுவாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதால்அவர்கள் தங்கள் முன்னோர் வழியில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இறந்தவர்க்குச் செய்யும் சடங்குகள் பழமை மாறாமல் அப்படியே அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

 மேற்குறித்துள்ள தொலைகாட்சியினரின் கள ஆய்வில் கண்ட செய்திகள் முழுமையாகப் பெற இயலவில்லை. எனினும் மேலும் அபதானி பழங்குடியினரின் மொழி, திருமனச் சடங்குகள், மகப்பேறு நிகழ்வுகள், இன்னபிற அவர்தம் வாழ்வியல் நெறிகளை ஆராய்ந்து அபதானி மக்கள் தமிழ் இனத்தவரே என்று உறுதி செய்ய வேண்டியுள்ளது.

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

தமிழமுது –100. – அபதானி பழங்குடியினர் தமிழர்களோ….?

 

தமிழமுது –100. – அபதானி பழங்குடியினர் தமிழர்ளோ….?

 

அருணாச்சலப் பிரதேசத்தின் கீழ் சுபன்சிரி பகுதியில் உள்ள ஜிரோ பள்ளத்தாக்கில் வாழும் ஒரு இனக்குழுவே அபதானி மக்கள் ஆவர். 

 

அபதானி (Apatani) மக்கள் என்பவர்கள் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில், கீழ் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள ஜிரோ பள்ளத்தாக்கில் வாழும் ஒரு பழங்குடியினர் சமூகத்தினர் ஆவர். இவர்களுக்கென தனித்துவமான கலாச்சாரம், மொழி மற்றும் பழக்கவழக்கங்கள் உள்ளன. 

அபதானி மக்களைப் பற்றிய முக்கிய தகவல்கள்: 

·         அமைவிடம்:

இவர்கள் வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில், ஜிரோ பள்ளத்தாக்கில் வசிக்கின்றனர்.

·         மக்கள் தொகை:

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சுமார் 43,777 பேர் இவர்களது மொத்த மக்கள் தொகையாகும்.

·         மொழி:

அபதானி மக்களுக்குச் சொந்தமாக ஒரு தனி மொழி உள்ளது.

·         பொருளாதாரம்:

விவசாயம் இவர்களது முக்கிய வாழ்வாதாரமாகும்.

·         கலாச்சாரம்:

அபதானி மக்களின் வாழ்க்கை முறை, சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் கலை வடிவங்கள் மிகவும் தனித்துவமானவை.

கூடுதல் தகவல்கள்: 

·         அபதானி கலாச்சார நிலப்பரப்பு, யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது.

·         இவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.\

(அபதானி மக்கள் பற்றிய தகவல்களை விக்கிபீடியாவில்   காணலாம்.)

 

பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை:

திருவிழாக்கள்-

அவர்களுக்கு இரண்டு முக்கிய பண்டிகைகள் உள்ளன - ட்ரீ மற்றும் மியோகோ. ஜூலை மாதத்தில், ட்ரீ என்ற விவசாய திருவிழா அனைத்து மனிதகுலத்தின் செழிப்பு மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனைகளுடன் கொண்டாடப்படுகிறது. பாகு-இடு , டாமிண்டா , பைரி நடனம் போன்றவை திருவிழாவில் நிகழ்த்தப்படும் முக்கிய கலாச்சார நிகழ்ச்சிகளாகும். [ 8 ] மியோகோ, முன்னோர்களால் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வரும் கிராமங்களுக்கு இடையேயான நட்பை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பு பிணைப்பு தற்போதைய உறுப்பினர்களால் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படுகிறது. முக்கிய கொண்டாட்டம் மார்ச் மாத நடுப்பகுதியில் நிகழ்கிறது, ஆனால் திருவிழாவுடன் தொடர்புடைய சடங்குகள் முந்தைய மாதத்தில் மிகவும் முன்னதாகவே தொடங்கி அடுத்த ஏப்ரல் மாதத்தில் முடிவடைகின்றன. இந்த காலகட்டத்தில், ஹோஸ்ட் கிராமத்தால் ஏராளமான உணவு மற்றும் பானங்கள் பரிமாறப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. (இணையத் தரவுகள் )

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------