தமிழமுது –.96. –தொல் தமிழர்களாகிய நாகர்கள்
: இலங்கை :2.
நாகதீபமும் மணிபல்லவமும்
இலங்கை வரலாற்று நூலான தீபவம்சம், மகாவம்சம் மற்றும்
தமிழ் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை போன்ற
நூல்கள் நாக மன்னர்களுக்கு இடையே நடந்த போர் பற்றி விளக்குகிறது. அவையாவன,
1. நாகராசன் என்னும் மன்னன் விசயன் என்றவனுக்கு
முன்பே நாக நாடான இலங்கை நயினாதீவு
கோநகராக்கி ஆழ்கிறான். இவனுக்கு ஒரு மகளும் மகோதரன் என்ற மகனும் இருந்தனர்.
2. தன் மகளை மலையராட்டிர நாகராசன் என்ற வேறொரு நாக மன்னனுக்கு
மணமுடித்து அவளுக்கு சீதனமாக தன் மணியாசனத்தையும் கொடுத்தனுப்பினான். அவர்களுக்கு
குலோதரன் என்னும் மகன் பிறக்கிறான்.
3. நயினாதீவு நாகராசன் தான் இறக்கும் முன்பு தன் மகனான மகோதரனுக்கு
பட்டம் கட்டிவிட்டு இறக்கிறான்.
4. அப்போது மகோதரன் மலையராட்டிர நாகராசனான் குலோதரன் மீது மணியாசனத்தை
பெரும் பெயரில் போர் தொடுக்கிறான்.
5. இரு படைகளுக்கும் போர் நடக்கும் போது அவர்களின் நடுவில் புத்தர் தோன்றி பேரிருளை உண்டாக்கியதால் நாகர்கள் அஞ்சினர். மீண்டும் புத்தர் அங்கு வெளிச்சத்தை உருவாக்கியவுடன் நாகர்கள் புத்தரை வணங்கி போருக்குக்
காரணமான மணியாசத்தில் புத்தரையே அமரச்செய்தனர்.
6. இதே கதையை மணிமேகலையும் கூறுகிறது. (மணிமேகலை- பீடிகை கண்டு
பிறப்புணர்த்திய காதை 58-61)
இந்த யுத்தம் நடந்த இடம் ‘நாகதீபம்’
என்று மகாவம்சம் கூறுகின்றது. இதே யுத்தம் ‘மணிபல்லவத்தில்’
இடம்பெற்றது என்று மணிமேகலைக் காப்பியம் கூறுகின்றது. ஆகவே,
‘மணிபல்லவமும் நாகதீபமும் ஒன்றே; யாழ்.குடாநாடுதான்
நாகதீபம் என்றால், அதுவே மணிபல்லவமுமாகும்’ என்று மேற்கூறிய அறிஞர் பெருமக்கள் முடிவுகட்டியுள்ளதுபோன்று
தோற்றுகின்றது. மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடும் ‘மணிபல்லவம்’
நயினாதீவாக இருக்கக்கூடும் என்ற கருத இடமுண்டு, ஆனால் ‘நாகதீபம்’ என்ற பெயர்
பண்டைய நாட்களில் நாகர் அரசாட்சிக்குட்பட்ட ஒரு தேசத்தை அல்லது இராச்சியத்தைக்
குறிக்க வழங்கப்பட்டதே அல்லாது, எமது ஊரைப் போன்ற ஒரு சிறிய
ஊரைக் குறிக்க வழங்கப்படவில்லை. இது குறைந்த பட்சம் யாழ். குடாநாட்டையும் அயல்
தீவுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. இன்றைய வடமாகாணம் முழுவதையும் மேற்குக்
கரையில் கல்யாணி (களனி) ஆறு வரையான பகுதிகளையும்கூட ‘நாகதீபம்’
உள்ளடக்கியிருந்தது என்ற கருத்தும் உண்டு. ஆகவே, ‘நாகதீபம்’ என்பது ஒரு இராச்சியத்தின் பெயர்
நயினாதீவைப் போன்ற ஒரு சிறிய தீவை அல்லது ஊரைக் குறித்த பெயரல்ல. ஆனால், மணிபல்லவம் ஒரு சிறிய தீவு. காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து தெற்கே
முப்பது ‘யோசனை’ தூரத்தில்
அமைந்திருந்தது என்று ‘மணிமேகலைக் காப்பியம் கூறும்
விவரங்கள் நயினாதீவுக்குப் பொருந்துவனவாக உள்ளன. ‘புத்தர்
இங்கு வந்தார். போரை நிறுத்திச் சமாதானம் செய்து மணியாசனத்தில் அமர்ந்து
பஞ்சசீலத்தைப் போதித்தார்’ என்பது உண்மையோ பொய்யோ என்பது
வேறு விடயம். அதுபற்றி சிங்கள வரலாற்றுத் துறை அறிஞர்களிடையேகூடக் கருத்து
வேறுபாடு உண்டு. ஆனால், ஒரு காலத்தில் இங்கு வாழ்ந்த தமிழ்
நாகர்கள் பௌத்த சமயத்தைத் தழுவியிருந்தனர். (இணையத்
தரவுகள்)
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE :
613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக