தமிழமுது –.88. – பன்மொழிப் புலவர் கா.
அப்பாத்துரையார் ; புராணமும் வரலாறும்.
கடவுளராகக் காட்சியளிக்கும் காவலர்:
சோழர், தொடக்கக் காலத்திய மன்னர் மரபு உண்மையான
வரலாற்று மரபா அல்லது முற்றிலும் புராண மரபுதானா என்று ஐயுற்றதாகவே உள்ளது. அத்துடன்
அவர்களில் சிலர் பெயரும் புகழும் அப்படியே இராமாணத் தலைவன் இராமன் முன்னோர் சிலரின்
பெயருடனும் புகழுடனும் முற்றிலும் ஒன்றுபடுகின்றன. இராமன் திருமாலாகக் கருதப்படுவதற்கு
இதுவே வழி செய்திருக்கக்கூடும்.
புராண மரபுடன் மயங்கும் இந்தச்
சோழர் குடி முதல்வர்கள் சிபி, முசுகுந்தன்,
காந்தமன், செம்பியன் மனு ஆகியோர்களேயாவர். இவர்களில் சிபி ஒரு புறாவைக் காப்பதற்காக
அதைத் துரத்தி வந்த பருந்தினிடம் தன் தசையையே அரிந்து கொடுத்தான் என்று கூறப்படுகின்றது.
முசுகுந்தனோ அரக்கர்கள் பலரை வென்று இந்திரனையே காத்தவன், காந்தமன் தன் வாளால் குடகு
மலையைப் பிளந்து காவிரியைச் சோழநாட்டில் ஓடச் செய்தவன் என்று குறிக்கப்படுகின்றான்..
செம்பியன் அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றைத் தாக்கி அழித்து உலகு காத்தவனாம்!
மனுச் சோழன் ஆவின் கன்றின்மீது தேரை ஏற்றி விட்டதற்காகத் தன் மகனைத் தானும் தேர்க்காலில்
இட்டு அரைத்து நீதியை நிலை நாட்டினானாம் !.
தமிழில் எவ்வளவு பற்றார்வம் கொண்ட தமிழரும் இந்தக் கதைகளை
வரலாறு என்று கூறவோ, நம்பவோ முன்வரமாட்டார்கள். ஆயினும் சிலப்பதிகாரமும், கலிங்கத்துப்பரணியும்
மட்டுமின்றிப் பல கல்வெட்டுகளும் புகழும் செயல்கள் இவை. இவற்றை முற்றிலும் கற்பனை,
வரலாற்று மெய்மை சிறிதும் அற்றவை என்று ஒதுக்கி விடவும் முடியாது. மனிதனின் வீரச் செயல்கள்,சிறந்த
செயல்கள் இங்கே தெய்வச் செயல்களாகப் புனைந்துரைக்கப்பட்டு அதன் மூலம் வரலாற்று மெய்ம்மைகள்
ஒரு சிறிதும் உருத் தெரியாமல் சிதைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவு.
கனவேயாயினும் வியத்தகு கனவே
..!
Pl. donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854
; MICR CODE : 613015003.
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக