தமிழமுது –.92. – பன்மொழிப் புலவர் கா.
அப்பாத்துரையார் ; புராணமும் வரலாறும்.
நாகர் தமிழ் இனத்தவரே ..2.
ஆரியரை எதிர்த்த அளவிலும் அவர்களுடன்
கலந்த அளவிலும் இவர்கள் சமுதாயப் படியில் பலதரப்பட்டு, சில இடங்களில் பிராமணராகவும்
சில இடங்களில் அரச வகுப்பினர், வணிக வகுப்பினராகவும் அறிவு, கலைவகுப்புனராகவும் இன்னும்
சில இடங்களில் தாழ்த்தப்பட்டவராகவும் காட்சியளிக்கின்றனர். ஆனால் இவ்வகுப்பு வேறுபாடு
படித்தர வேறுபாடு கடந்து மலையாளம், வங்கம், தெகிழக்காசியப்பகுதிகளில் இவர்கள் பெண்
கொடுக்கல் வாங்கல் செய்வதும், பொதுக் கலை வாழ்க்கை மரபுகள் பேணுவதும் இவர்கள் இன ஒற்றுமையை
வலியுறுத்துகின்றன.
பிறப்பு வேறுபாடு காட்டாத தமிழகத்துத் தமிழர்
தம் பண்பு மட்டும் பேணி ஆரியருடன் கலந்துறவாட ஒருப்பட்டனர். இன்றைய தமிழகத்துக்கு வெளியிலுள்ள
தமிழினத்தவராகிய நாகர்களோ, சில இடங்களில் ஆரியரை எதிர்த்துத் தனி வாழ்வு வாழ்ந்தும்
சில இடங்களில் ஆரியரைத் தம் வயப்படுத்தித் தாமே ஆரியராகி அவர்களுக்குத் தலைமை தாங்கியும்
இன்னும் சில இடங்களில் அடிமைப்பட்டும் தமக்குள் வேற்றுமைப்பட்டனர். தமிழரைப் போலப்
பண்பாட்டு மூலம் அவர்கள் ஒன்றுபடுத்த முயன்ற நாக இனப் பெரியோர்களே புத்தர், மகாவீரர்.
ஆனால் உலகிலும் அறிவுலகிலும் வெற்றிகண்ட இவர்கள் ஆரியப்பண்பின் அவியற்களமான இந்தியத்
துணைக்கண்ட்த்தின் எல்லையளவில் பெரிதும் தோல்வியையே கண்டனர் என்றால் தவறன்று.
வருங்கால ஆராய்ச்சிகளே இவற்றை
மேலும் தெளிவு படுத்த வேண்டும்.
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE :
613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக