திங்கள், 25 ஆகஸ்ட், 2025

தமிழமுது –105. – தொல்தமிழர் உணவு –கள்..?நற்றிணை: கள் – விருந்துணவு.

 

தமிழமுது –105. –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

நற்றிணை: கள்விருந்துணவு.

குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம்

சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதில்

கான மஞ்ஞை கட்சிச் சேக்கும்

 கல் அகத்து எம் ஊரே செல்லாது

சேந்தனை சென்மதி நீயே பெருமலை

வாங்கு அமைப் பழுநிய நறவு உண்டு

வேங்கை முன்றில் குரவையும் கண்டே.” – 276 : 4 -10.

வலிமையான விலங்குகளை வேட்டையில் பற்றி வாழும் இயல்புடைய வேட்டுவர்தம் மகளிர் என்றாய் ; ஆனால் யாம் குறவர் மகளிரேம் ; மலை வாழ் கொடுச்சியரேம் ; உயர்ந்த  பரண் மீது இருக்கும் தினைப் புனக் காவலன் நெடிய கால்களுடன் , அமைந்த கட்டுப் பரணில் காட்டின் மயில்கள் தம் இருப்பிடமாக்க் கருதித் தங்கும்; இத்தகைய மலையிடையே அமைந்தது எம் ஊர் ; ஆகவே, நீ இப்பொழுது நின்னூர்குச் செல்லுதலைத் தவிர்க; எம்மூரில் தங்குக ; அங்கு,  பெரிய மலையில் விளைந்த வளைந்த மூங்கிலில்  முற்றிய நறவாகிய கள் உண்க ; வேங்கை மரம் அமைந்த முன்றிலிலே குரவை அயர்தலையும் காண்பாயாக ; பின் நீ நின் ஊருக்குச் செல்வாயாக.

என்று தோழி தலைவனிடம்  உலக இயல்பாகிய விருந்து ஏற்றலைக் கூறினாள்.

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

 குறுந்தொகை :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக