தமிழமுது –104. –
தொல்தமிழர் உணவு –கள்..?
”அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும்
நஞ்சு.”
நற்றிணை: கள்ளும் காமமும்:
கள் மிக உண்ணினும்
கமக் கூட்டம் மிகினும் கண் சிவந்து காட்டும் என அறிக.; கள்ளும் காமமும் மயக்கம்
தருவனவாம்.
”துறை கெழு மரந்தை
அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே கண்டிசின்
தெய்ய
உழையின் போகாது அளிப்பினும்
சிறிய
ஞெகிழ்ந்த கவின் நலம் கொல்லோ மகிழ்ந்தோர்
கட் களி செருக்கத்து
அன்ன
காமம் கொல் இவள் கண்
பசந்ததுவே.”- 35 : 7 –
12.
(மரந்தை - மாந்தை எனவும் வழங்கப்பெறும்.
இஃதொரு சேர நாட்டுத் துறைமுகப்பட்டினம்.) (நறா என்பது பூவை விளையவைத்த
ஒருவகைக் கள். நறாக் கள் அதில் இடும் பூமொட்டுகள்.)
மாந்தை நகர்
போன்ற இவளது நலம் முன்பும் இத்தன்மை உடையதே, நீ காண்பாயாக இவளிடத்துக் களவுக் காலத்தில் நீ விலகாமல் இருந்து அன்பு செய்தாலும்,
இவள் கண் பசப்புற்றது ;
அது சிறிதளவு முயக்கம் நெகிழ்ந்தமையால் கெட்ட அழகின் மிகுதியோ..? கள் உண்டார்க்குக் கள் இல்லாமற் போகும்
காலத்து உண்டாகும் வேறுபாடு போன்ற காம வேறுபாடோ..? அவ்விரண்டும்
அல்லவே. ( தலைவன், தலைவியை விட்டுச்
சிறிதும் பிரியாது இருத்தல் வேண்டும் எனத் தோழி அறிவுறுத்தினாள்.)
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE :
613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக