தமிழமுது –108. –
தொல்தமிழர் உணவு –கள்..?
”அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும்
நஞ்சு.”
பதிற்றுப்பத்து :
கள்ளுக்கு விலையாகப் பசுவின் இறைச்சி :
”காந்தளஅம் கண்ணி கொலைவில் வேட்டுவர்
செங்கோட்டு ஆமான் ஊனொடு காட்ட
மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு
பொன்னுடை நியமித்துப் பிழிநொடை கொடுக்கும்.” – 30: 9 -13.
காந்தள் பூவினால் செய்த கண்ணியையும் கொலை செய்யும் வில்லினையும் உடைய வேட்டுவர், சிவந்த கொம்பையுடைய காட்டுப் பசுவின்
இறைச்சியோடு, வலிமையான காட்டு யானையின் கொம்புகளையும்
எடுத்துக்கொண்டு, செல்வம் பொருந்திய கடைத்
தெருவிற்குச் செல்வர், அங்கு, தாம் வாங்கும் கள்ளுக்கு விலையாகப் பசுவின் இறைச்சியையும்
யானையின் தந்தத்தையும் கொடுப்பர்.
(பிழி – கள் ; நொடை – விலை ; நியமம் – கடைத்தெரு ; ஆமான் – காட்டுப்
பசு.)
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE :
613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக