வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

தமிழமுது –.86. – மடகாசுகர் –இலெமூர்.

 

தமிழமுது –.86. – மடகாசுகர் இலெமூர்.

சங்க இலக்கியங்கள் அசுணம், இலெமூர் குரங்கினத்தைக்  குறிக்கின்றனவா..? – 2.

 

Discovery Tamil ,23 -04- 14. 9 . PM. செய்திகளின் தொகுப்புரை:

 

இலெமூர் இனத்தில்  சுமார் 20 வகையான இலெமூர்கள் வாழ்கின்றன. இலட்சக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வகை வெண்குரங்கு லீவர் இங்குதான் வாழ்கிறது. இது இலை, பூ  இவற்றையே உணவாகக் கொள்ளும்.  லீவர் மரத்தில் ஒரு வாசனையை விட்டுச் செல்லும் ஆண்குரங்கு அப்பெண் குரங்கைத் தேடிச் செல்லும். லீவர் என்றால் இறந்தவற்றின் சிதறல்கள் என்று பொருள். மூங்கில்கள் செழித்த பகுதிகளில் வாழும்  மூங்கில் லீவர்  மூன்று வகையானவை. மூங்கில் குருத்துகளை விரும்பி உண்ணும். சைனைடு நச்சுத்தன்மை உடையவற்றையும் உண்டு உயிர் வாழும் தன்மை கொண்டது. லீவர் மடகாகரில் நெடுங்காலம் வாழ்ந்துவருகிறது.

 

டென்ரிட் குரங்கு மூக்கு நீளமாக இருக்கும்  பார்ப்பதற்கு முள்ளம் பன்றிபோல் இருக்கும். இத்தீவில் மட்டுமே காணக்கூடிய ஓர் உயிரினமாகும். முள் ஓசை காட்டில் பரவிக் குட்டியை ஈர்க்கும்.  இத்தகைய தகவல் பரிமாற்றம் உலகில் இதற்கு மட்டுமே உண்டு.

  முதுகில் உள்ள முள் ஒன்றோடொன்று  உரசி  காற்றில் பரவும் , பெரிய ஒலி எழுப்பித் தன் குட்டியை அழைக்கும்.

 

 மடகாசுகர் , குயின் – குயில் குறும்பூழ் போல் உள்ளது. ஆப்பிரிக்கா தொடர்பால் வாழை விசிறி போல் பயனிர் மரம் ஐஐக்கள் லெமூர் வகையைச் சேர்ந்த குரங்குகள்  பூந்தானை உணவாகக் கொள்ளும். அணில் போல் கொரிக்கும் பற்களைக் கொண்டது ; பெரிய கண்கள் நீண்ட வால் அதில் வட்டவடிவில் கருப்பு, வெள்ளைப் பட்டிகள்  வாழிடமாகக் கடலின் விளிம்புவரை பரவியுள்ள மழைக்காடுகளே.

 

 நாம் மேற்சுட்டியுள்ள செய்திகள் உலகின் தென்முனை பிளவு பட்டுக் கண்டங்கள்  உருவாகுவதற்கு முன் லெமூர் குரங்கினங்கள்  அங்கு வாழ்தவையே. அதனாலன்றோ கடலுள் மூழ்கிப்போன நிலப்பரப்பை ‘இலெமூரியா’ என்று அழக்கின்றனர். சங்க இலக்கியம் கூறும் அசுணம் லெமூர் குரங்கின்  தோற்றத்தைக் கொண்டிருக்கலாம்.  லெமூரின் வாழிடம் பாறைப் பிளவுகளே என்பதாலும் அதியுணர்ச்சியும்  அதீத நுகர்வு ஆற்றலும் கொண்டுள்ளமையால்  லெமூரை அசுணம் எனக் கொள்ள மேலும் பல வலுவான சான்றுகள் தேவைப்படுகின்றன, 

 

உலக உயிரின ஆய்வாளர்கள் மடகாசுகரில்  உலகில் வேறு எங்கும் காண இயலாத  உயிரினங்களைப் பற்றி அறிவியல் முறையில் ஆழமாக ஆராய்ந்து வருகின்றனர். மேலும்  அறிவியல் ஆய்வுகளை ‘விக்கிப்பீடியாவில்’ கண்டு தெளிவு பெறுக.

Pl. donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக